ராஜபாளையம்:ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்துார் மேலுார் துரைச்சாமிபுரத்தில் உள்ள முப்பிடாதி அம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழா கடந்த 4ல் துவங்கியது. தினமும் முப்பிடாதி மற்றும் வடகாசி அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர்.