Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புஷ்கர விழாவில் அலைமோதும் ... சபரிமலை தீர்ப்புக்கு எதிராக ஆவேசம்: தமிழகம், கேரளாவில் போராட்டம் சபரிமலை தீர்ப்புக்கு எதிராக ஆவேசம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரி 7ம் நாள்: தைரியத்தை தாராளமாக தரும் மகாலட்சுமி
எழுத்தின் அளவு:
நவராத்திரி 7ம் நாள்: தைரியத்தை தாராளமாக தரும் மகாலட்சுமி

பதிவு செய்த நாள்

15 அக்
2018
10:10

துன்பங்கள் நம்மை விட்டு ஓடும் காலம் நவராத்திரி. நவராத்திரியின் ஏழாம் நாள், அன்னையை மகாலட்சுமியாக வழிபட வேண்டும்.கையில் ஜெபமாலை, கோடாரி, கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள்.சண்ட முண்டர்களை வதைத்த பின், பொன் பீடத்தில் அம்பிகை அமர்ந்து, வீணை வாசிக்கும் கோலம். இந்நன்னாளில் தையல் நாயகியான அம்பாளை வணங்குவது, புத்தொளியையும், சகல ஐஸ்வர்யங்களையும் அள்ளித்தரும். அன்னையை, காளராத்ரியாக பாவித்து வழிபட வேண்டும்.

காளராத்ரி என்றால் அடர்ந்த இருட்டு என அர்த்தமாகும். இந்த நாளன்று, தன் பக்தர்களுக்கு இவள் தைரியத்தை அளிப்பாள். காளராத்ரி சிலைக்கு, நான்கு கைகள் உண்டு. இவளை சாம்பவி எனவும் அழைப்பர். இத்தனை ஆயுதங்களை ஏந்தி, வீராவேஷமாக காட்சியளிக்கும் அம்பிகையை காணும்போது, நம் மனதில் தைரியம் பிறக்கும். நம் வாழ்க்கை நம் கையில்; அதை ரசித்து வாழ வேண்டும், பிறரின் வளமான வாழ்வைக் கண்டு ஏங்கக் கூடாது. அப்படி ஓர் எண்ணம் இருப்பின், நானே அக்னி பிழம்பாய் மாறி, அழித்து விடுவேன் என பயமுறுத்துவதாய் அம்பிகையின் தோற்றம் இருக்கும்.வழிபடும் முறைபூக்களால் அலங்கார கோலமிட வேண்டும். 8 வயது பெண் குழந்தையை அலங்கரித்து, உபசாரம் செய்து துதிக்க வேண்டும். அக்குழந்தைக்கு உடை கொடுத்து, திராட்சை பழ ரசமும், விரலி மஞ்சளும் தானம் கொடுக்க வேண்டும். விளையாட கூழாங்கற்களை கொடுக்கலாம்.

பயறு சுண்டல், தேங்காய் சாதம், எலுமிச்சை சாதத்தை நிவேதனமாக படைக்க வேண்டும். பிலஹரி ராகத்தில், கீர்த்தனை பாட வேண்டும். ஒன்பது நாட்களும், பூஜை செய்ய முடியாதவர்கள், கடைசி மூன்று நாட்கள், சப்தமி, அஷ்டமி, நவமி நாட்களில் பூஜை செய்தால், ஒன்பது நாட்களும் பூஜை செய்த பலனை அடைவர்.

கலச வழிபாடு: ஒரு சொம்பில் சுண்ணாம்பு தடவி, சுற்றிலும் குங்கும பொட்டு வைத்து, செம்பினுள் பச்சரிசியை நிரப்ப வேண்டும். பின், மாவிலையையும், மஞ்சள் பூசிய தேங்காயையும் செம்பின் மீது கும்பமாக வைக்க வேண்டும். மலர் கோலம் போட வேண்டும்.

பாடல்:
தண்ணளிக்கு என்று முன்னே பலகோடிதவங்கள் செய்வார்மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார் மதிவானவர் தம்விண்ணளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோபண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே!

மூல மந்திரம்: ஓம்-லம்-லக்ஷ்மியை -நம
காயத்ரி: ஓம் மஹாதேவ்யைச வித்மஹே
விஷ்ணு பத்யைசதீமஹி
தன்னோ லக்ஷ்மி பிரசோதயாத்

சரஸ்வதியை ஏழாம் நாளன்று, மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும்போது ஆவாகனம் செய்வது முறையாகும். இது தேவியின் அவதார நாள்.பூஜையின் போது, ரக்த சந்தனம் என்றழைக்கப்படும் செந்நிற சந்தனத்தை வில்வத்தில் தோய்த்து, தேவிக்கு அர்ச்சனை செய்பவர், அரச வாழ்வைப் பெறுவர். வெற்றித் திருமகள் எப்போதும்உன் தோள் பற்றித்திரிவாள்…உன் நெற்றியில் பொலியும்வெண்ணீறு கண்டு!!!துன்பங்களைக் கண்டு நீ ஓடிய காலம் போய், துன்பங்கள் உன்னைக் கண்டு ஓடும் காலம் வரும் என்ற நம்பிக்கையுடன், நவராத்திரி விரதங்களை கடைப்பிடிக்க வேண்டும். முறையான விரத வழிகளை கண்டு, அதன்படி விரதத்தை மேற்கொண்டால் சகல சவுகரியங்களும் கிடைக்கும். அனைத்தும் தெளிவாகும் ஆனந்தம் தாண்டவமாடும்இறையருள் கூடும் ஈரேழு உலகமும் துணை நிற்கும்உண்மை விளங்கும் ஊரே உன்னை கொண்டாடும் எப்போதும் வெற்றியே ஏகாந்தமாய் மலர்ந்திருப்பாய் ஐக்கியமாய் உணர்வாய்ஒருவனே தேவன் என தெளிவாய்ஓங்கும் உன் புகழ்ஒளதடமாய் பிறவிநோய் தீரும்

நெய்வேத்தியம்: காலையில் வெண் பொங்கல், பால் பாயாசம்: மாலையில் கடலைப் பருப்பு, புதினா சுண்டல்
அம்பாள்: ஸ்ரீமகாலக்ஷ்மி
குணம்: சவும்யம்
சிறப்பு: ஸ்ரீமஹாவிஷ்ணுவின் மனைவி
பூஜை நேரம்: மாலை 6-:00 - 7:30 மணி
மலர்கள்: முல்லை, வெண்மை நிறமுடைய மலர்கள்
தாம்பூலங்கள்: 11 வகையான மங்கல பொருட்களை தாம்பூலமாக, பூஜைக்கு வருபவர்களுக்கு கொடுக்க வேண்டும்
ராகம்: கல்யாணி
வணங்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள்: பரணி, பூரம், பூராடம்
திசை புத்தி நடப்பவர்கள்: சுக்ர திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில், இன்று புத்தாண்டு பிறப்பு மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; ஆங்கில புத்தாண்டையொட்டி, திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை முதலே, ... மேலும்
 
temple news
நாமக்கல்; ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, 3 டன் எடையுள்ள பல்வேறு மலர்களால், ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
சின்னாளபட்டி; புத்தாண்டை முன்னிட்டு சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் விஸ்வரூப தரிசனம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar