பதிவு செய்த நாள்
15
அக்
2018
10:10
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் தங்கம், வெள்ளி மூலாம் பூசி போலி பொருட்களை விற்கின்றனர். பழநி கோயில் உண்டியலில் வேல், சுவாமி சிலைகள், கால், தலை, உருவம், பாதம், டாலர்கள், பித்தளை விளக்குகளை நேர்த்திக்கடனாக பக்தர்கள் செலுத்துகின்றனர். கிரிவீதி, அடிவாரப்பகுதியில் இப்பொருட்களை விற்கின்றனர். இவை தங்கம், வெள்ளி மூலாம் பூசிய தகடுகள். பார்ப்பதற்கு தங்கம், வெள்ளிபோல தெரிவதால் பக்தர்கள் வாங்கி ஏமாறுகின்றனர். பொருட்களை வாங்கும் போது பக்தர்கள் கவனமாக இருக்க வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.