பதிவு செய்த நாள்
15
அக்
2018
11:10
புதுச்சேரி: நல்லாத்தூர் வரதராஜப் பெருமாள் கோவிலில், நவராத்திரி விழாவையொட்டி, ஊஞ்சல் உற்சவம் நடந்தது.நல்லாத்தூர் வரதராஜப் பெருமாள் கோவிலில், நவராத்திரி விழா கடந்த 10ம் தேதி துவங்கியது. தொடர்ந்து, தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, இரவு 7.00 மணிக்கு, பெருமாள் சன்னதி புறப்பாடு, 7.30 மணிக்கு பெருமாள், தாயார் ஊஞ்சல் சேவையும் நடந்து வருகிறது.
நவராத்திரி விழாவை தொடர்ந்து, வரும் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை பவித்ர உற்சவம் நடக்கிறது. இக்கோவிலில் பெருந்தேவி தாயாருக்கு எட்டு வெள்ளிக்கிழமை அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமணத் தடை உள்ள ஆண், பெண் இருபாலருக்கும் விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.