பதிவு செய்த நாள்
07
பிப்
2012
03:02
விக்கிரமசிங்கபுரம் :விக்கிரமசிங்கபுரம் இருதயகுளத்தில் தூயலூர்து அன்னை கெபி திருத்தல திருவிழா வரும் 12ம் தேதி நடக்கிறது. விக்கிரமசிங்கபுரம் இருதயகுளத்தில் தூயலூர்து அன்னை கெபி திருத்தல திருவிழாவை முன்னிட்டு கடந்த 3ம் தேதி மாலை சுமார் 6 மணிக்கு பாளை., மறைமாவட்டம் குருகுருலதேவர் ஜோமிக்ஸ் தலைமை வகித்து கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பங்குதந்தைகள் பேசினர். இன்று (7ம் தேதி) புதிய குருக்கள் பங்கேற்கும் இறை அழைத்தல் விழாவும், நாளை (8ம் தேதி) குடும்ப விழாவும், 9ம் தேதி மாலை 6 மணிக்கு நற்செய்தி அறிவிப்பு விழாவும், 10ம் தேதி அன்னையின் தேர்ப்பவனியும், 11ம் தேதி நற்கருணை பவனியும் நடக்கிறது. திருவிழா நாளான 12ம் தேதி காலை 5 மணிக்கு பாளை., மறைமாவட்டம் ஆயர் ஜூடுபால்ராஜ் தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி, தொடர்ந்து "அன்னையே அன்பாக என்ற தலைப்பில் பேசுகின்றார். காலை 8 மணிக்கு "அன்பில் மகிழும் அன்னை என்ற தலைப்பில் மண்ணின் மைந்தர்களின் பேசுகின்றனர். ஏற்பாடுகளை கோயில் பங்குதந்தை அருள்அம்புரோசு, உதவி பங்குதந்தை இருதயராஜ், விழா கமிட்டி தலைவர் அந்தோணிராயப்பன், துணைத் தலைவர் பாஸ்காபால், செயலாளர் அருள்ராஜ், துணை செயலாளர் பாப்பையா, பொருளாளர் கபிரியேல், துணை பொருளாளர் நேவிராஜன் செய்துள்ளனர்.