தென்காசி :தென்காசி இரட்டை விநாயகர் கோயிலில் நாளை (8ம் தேதி) சிறப்பு யாகம் நடக்கிறது. தென்காசி ஹவுசிங் போர்டு காலனி குடிசை மாற்று வாரியம் பகுதியில் பிரம்ம சக்தி இரட்டை விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் உலக நன்மைக்கான சிறப்பு யாகம் நாளை (8ம் தேதி) நடக்கிறது. காலை 6 மணிக்கு இந்த சிறப்பு யாகம் நடக்கிறது. 8 மணிக்கு நறுமணப் பொருட்களால் மகா அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடக்கிறது. மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை அன்னபூரணி தர்ம அறக்கட்டளை மற்றும் விழா கமிட்டியார் செய்துள்ளனர்.