பதிவு செய்த நாள்
15
அக்
2018
11:10
மணலி புதுநகர்: மணலிபுதுநகர், அய்யா கோவில் திருத்தேரோட்டத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
சென்னை, மணலிபுதுநகர், அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, ஆண்டுதோறும், புரட்டாசி மாத பத்து நாள் திருவிழா வெகு விமரிசையாக நடக்கும். இவ்வாண்டு, 5ம் தேதி, திருநாம கொடியேற்றத்துடன், புரட்டாசி மாத பத்து நாள் திருவிழா துவங்கியது.முக்கிய நிகழ்வான தேரோட்டம், நேற்று (அக்., 14ல்) மதியம் நடைபெற்றது.
செண்டை மேளம், மங்கள வாத்தியம் முழங்க, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தில் பங்கேற்ற, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அய்யா ஹரஹர சிவ சிவ, அய்யா உண்டு என, முழங்கியபடி, தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
முக்கிய வீதிகளில் வலம் வந்த தேர், மாலையில் நிலையை அடைந்தது. இரவு, இந்திர விமானத்தில் அய்யா பதிவலம் வருதல், பூம்பல்லாக்கு பதிவலம் வருதல், திருக்கொடி அமர்தல் நிகழ்வுடன், விழா நிறைவுற்றது.