Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) வெற்றி மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ... மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) வாகன யோகம் மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ...
முதல் பக்கம் » சித்திரை ராசிபலன் (14.4.2019 முதல் 14.5.2019 வரை)
கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) ஆரோக்கியம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 அக்
2018
15:19

குணத்தில் குன்றாகத் திகழும் கும்ப ராசி அன்பர்களே!

இந்த மாதம் புதன் அக்.23ல் இருந்து நவ.13 வரை சாதகமான இடத்தில் இருந்து நற்பலன் கொடுப்பார்.  சுக்கிரன், சனி, ராகு மாதம் முழுவதும் நன்மை தர காத்திருக்கின்றனர். சுக்கிரனால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும்.  சமுகமதிப்பு எதிர்பார்த்தபடி இருக்காது.  குரு அவ்வப்போது மன சஞ்சலத்தை ஏற்படுத்துவார்.

குடும்பத்தில் வசதி வாய்ப்பு  பெருகும். பொன், பொருள் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களின் ஆதரவால் நன்மை ஏற்படும்.  மாதத் தொடக்கத்தில் புதனால் மனதில் வேதனை குறுக்கிடலாம். சிலர் பொல்லாப்பைச் சந்திக்கலாம். பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும். அவரால் அக்.23ல் இருந்து நவ.13 வரை முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.  புத்தாடை, அணிகலன்கள் வாங்க வாய்ப்புண்டு. பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும். கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை உருவாகும்.  அக்.20,21, நவ.16ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள். சகோதரவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.  அக்.27,28ல் உறவினர் வகையில் பிரச்னை வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். ஆனால் நவ. 11,12ல் அவர்கள் வருகையால் நன்மை
கிடைக்கும்.  

பணியாளர்களுக்கு  திறமைக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். அக்.23 வரை  வீண் அலைச்சல், வேலைப்பளு அதிகரித்தாலும் அதற்குரிய வருமானம் கிடைக்கும். அதன் பிறகு நிலைமை சீராகும்.  சிலர் பதவி உயர்வு கிடைக்கப் பெறுவர். பணியிடத்தில் செல்வாக்கு உயரும். சகபெண் ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். மேலதிகாரிகளின் கருணை பார்வை கிடைக்கும்.  நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். அரசு ஊழியர்கள் வளர்ச்சிப்பாதையில் வெற்றி நடைபோடுவர். நவம்பர் 9,10ல் அதிகாரம் கொடிகட்டி பறக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம் தொழில், வியாபாரத்தில் சனி, ராகுவால் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் உண்டாகும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் பெறும். பங்கு வர்த்தகத்தில் ஆதாயம் கிடைக்கும். தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்கள் பிடியில் இருந்து அக்.23க்கு பிறகு விடுபடுவர். அதன் பிறகு வருமானம் அதிகரித்துக் கொண்டே இருக்கும். புதிய தொழில் முயற்சி அனுகூலத்தைக் கொடுக்கும். கொடுக்கல், வாங்கல் சிறப்பாக இருக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும். அக்.18,19,22,23, நவ.13,14,15 ல் சந்திரனால் தடைகள் குறுக்கிடலாம். அக்.31, நவ.1ல் எதிர்பாராத வருமானம் கிடைக்கும். நவ.13க்கு பிறகு சிலர் பண இழப்பைச் சந்திக்கலாம் கவனம்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும்.  புகழ், பாராட்டுக்கு தடையேதும் இருக்காது. தொழில்ரீதியாக வெளியூர் பயணம் செல்ல வாய்ப்புண்டு. அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும். ஆனால் எதிர்பார்த்த பலன் பெற முடியாது. பலன் எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும். அக்.29,30ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.

மாணவர்கள் வேண்டாத சகவாசத்திற்கு ஆளானாலும் அக்.23க்கு பிறகு மனம் திருந்துவர். அதன் பிறகு படிப்பில் முன்னேற்றம் காண்பர். போட்டி, பந்தயங்களில் பங்கேற்று வெற்றி காண்பர். ஆசிரியர் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். தேர்வில் எதிர்பார்த்ததை விட கூடுதல் மதிப்பெண் கிடைக்கும்.

விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற வருமானம் காண்பர். கறுப்பு நிற தானியங்கள் பயிரிடுவது நல்லது. அதிக செலவு பிடிக்கும் பயிர்களைத் தவிர்க்கவும். கால்நடை வகையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப்போகும்.

பெண்களுக்கு குடும்பத்தார் மற்றும் கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் முக்கிய அங்கமாக திகழ்வீர்கள் அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். அக்.23 வரை பொறுமையும், நிதானமும் தேவை. அதன் பிறகு வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சுயதொழில் செய்யும் பெண்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்.

* நல்ல நாள்: அக்.20,21,24,25,26,31, நவ.1,2,3,9,10,11,12,16
* கவன நாள்: நவ.4,5 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 4,7
* நிறம்: கருப்பு, வெள்ளை

* பரிகாரம்:
●  நவக்கிரகங்களில் ராகு, கேதுவுக்கு அர்ச்சனை
●  வெள்ளியன்று ராகு கால துர்க்கை வழிபாடு
●  சுவாதியன்று லட்சுமி நரசிம்மருக்கு பானகம்

 
மேலும் சித்திரை ராசிபலன் (14.4.2019 முதல் 14.5.2019 வரை) »
temple
பொதுநலனில் அக்கறை கொண்ட மேஷ ராசி அன்பர்களே!

ராகு உங்கள் ராசிக்கு 3ல் அமர்ந்தும், குரு 9ல் ... மேலும்
 
temple
நல்லதை சிந்திக்க விரும்பும் ரிஷப ராசி அன்பர்களே!

இந்த மாதம் 10-ம் இடத்தில் இருக்கும் சுக்கிரன் ... மேலும்
 
temple
திட்டமிட்டு பணியாற்றும் மிதுன ராசி அன்பர்களே!

ராசிக்கு 7ம் இடத்தில் இருக்கும் குருவும், 11-ல் ... மேலும்
 
temple
கண்ணியம் தவறாத கடக ராசி அன்பர்களே!

உங்களுக்கு இந்த மாதம் வளர்முகமான காலம். சூரியன் சாதகமான ... மேலும்
 
temple
மனதாலும் தீங்கு செய்யாத சிம்ம ராசி அன்பர்களே!

இந்த மாதம் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் உள்ள குரு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.