பதிவு செய்த நாள்
24
அக்
2018
12:10
உடுமலை:சோமவாரப்பட்டி அமரபுயங்கரீஸ்வரர் கோவிலில், இன்று மகா அன்னாபிேஷகம் நடக்கிறது.அம்மையப்பரான சிவபெருமானுக்கு, ஐப்பசி பவுர்ணமியன்று, அன்னாபிேஷகம் சிறப்பாக நடத்தப்படுகிறது. ஐம்பெரும் பூதங்களின் சேர்க்கையான அன்னத்தால், இறை வனுக்கு அபிேஷகம் இன்று (அக்., 24ல்) செய்யப்படும்.
தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பதை விளக்கும் வகையில், அரிசி சாதம் படைத்தும், காய்கறிகளை இறைவனுக்கு படைத்தும், வழிபாடு நடக்கும்.உடுமலை அருகே சோமவாரப் பட்டியில், பழமை வாய்ந்த, அமரபுயங்கரீஸ்வரர் கோவில் உள்ளது;
கோவிலில், ஐப்பசி பவுர்ணமியையொட்டி, மகா அன்னாபிேஷகம், இன்று (அக்., 24ல்), மதியம் 12:00 மணிக்கு நடக்கிறது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்துள்ளனர். உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில், சிறப்பு பூஜைகள், காலை 10:00 மணிக்கு துவங்குகிறது. சுற்றுப்பகுதிகளிலுள்ள சிவாலயங்களிலும், அன்னாபிேஷக விழா இன்று (அக்., 24ல்) நடக்கிறது.