மதுரை : சபரிமலையின் புனிதத்தை காக்க வலியுறுத்தி மதுரையில் பா.ஜ., மகளிரணியினர் யாத்திரையில் ஈடுபட்டனர்.
மேல - -வடக்கு மாசி வீதி சந்திப்பில் மாநில தலைவர் மகாலட்சுமி தலைமையில் யாத்திரையை தேசிய செயலர் எச்.ராஜா துவக்கி வைத்தார். நிர்வாகிகள் ராதிகா, ரோஜாராணி முன்னிலை வகித்தனர். நகர் தலைவர் சசிராமன், பொதுச்செயலர்கள் பாரதிராஜ், சீனிவாசன், நிர்வாகிகள் சிவபிரபாகரன், ஆஷாராணி, ஜெயஸ்ரீ பங்கேற்றனர். வடக்கு, கீழ மாசி வீதிகள் வழியாக யாத்திரை விநாயகர் கோயிலை அடைந்தது. சபரிமலை புனிதம் காக்கும் வரை மகளிரணி சார்பில் போராட்டங்கள் தொடரும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.