பதிவு செய்த நாள்
25
அக்
2018
11:10
திண்டுக்கல்: ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, திண்டுக்கல், பழநி உட்பட பல்வேறு பகுதியிலும் சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் நடந்தது. ஆண்டுதோறும் ஐப்பசிமாத பவுர்ணமியில், சிவன் கோயில்களில் உலக நலனுக்காகஅன்னாபிஷேகம் செய்வது வழக்கம்.
நேற்று ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு திண்டுக்கல் அபிராமிஅம்மன் கோயில், சித்திவிநாயகர் கோயில்களில் அன்னாபிேஷகம் நடந்தது.பழநி பெரியாவுடையார் கோயில், புதுநகர் யோகஸ்வரர், மற்றும் இடும்பன்மலை அருகேயுள்ள பஞ்சமுக பிரபஞ்சநாதர் கோயிலில் சிவலிங்கம், முருகருக்கு அன்னத்தால் அபிஷேகமும், சர்ப்ப ஜடாதாரி அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது.
பழநி மதனபுரம் அண்ணாமலையார் உண்ணாமுலை நாயகி கோயில், நேதாஜிநகர் காமாட்சி ஏகாம்பரேஸ்வரர் போன்ற கோயில்களிலும்சிறப்பு அலங்காரம் செய்து,அன்னாபிஷேகம் நடந்தது.
கன்னிவாடி: கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில் மூலவர், உற்சவர், நந்திக்கு 30 வகை திரவிய அபிேஷகம் நடந்தது. தேவார, திருவாசக பாராயணத்துடன், சிறப்பு பூஜைகள் நடந்தது. கன்னிவாடி சோமலிங்க சுவாமி கோயிலில், சிறப்பு அபிேஷகம் நடந்தது. முன்னதாக, ஓம்கார விநாயகர், நந்தி, சோமலிங்கசுவாமிக்கு பல்வேறு திரவிய அபிேஷகம் நடந்தது.
நத்தம்: நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் மூலவர் சிவலிங்கத்திற்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட அபிேஷகங்கள் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் அன்னாபிேஷகம் நடந்தது. கைலாசநாதர் மற்றும் செண்பகவள்ளி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
கள்ளிமந்தையம்: கள்ளிமந்தையம் அருகே கூத்தம்பூண்டி ஆனந்தவள்ளி உடனமர் மார்க்கண்டேஸ்வரர் கோவிலில் காலையில் விநாயகர் வழிபாடு, கலச ஆஹாசனம் நடந்தது. திரவ்ய அபிேஷகம், அன்னதான அபிேஷகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.