பதிவு செய்த நாள்
25
அக்
2018
11:10
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவிலில், ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு ருத்ரலிங்கேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் விழா நடந்தது.சிவன் கோவில்களில், ஐப்பசி மாதம் பவுர்ணமியன்று, அன்னாபிேஷக விழா நடத்தப்படுகிறது. பொள்ளாச்சியில் தாலுகா அலுவல கம் அருகிலுள்ள, மாகாளியம்மன் கோவிலில் ஐப்பசி பவுர்ணமியான நேற்று, (அக்., 24ல்) சிவ பெருமானுக்கு அன்னாபிஷேகம் நடந்தது.சிவனுக்கு, 16 வகையான திரவியங்களால் அபிேஷ கம், அன்னத்தால் அலங்காரம் மற்றும் தீபாராதனை வழிபாடு நடந்தது. பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது. சிவனுக்கு சாற்றப்பட்ட அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.வடசித்தூரிலுள்ள சாம்பசிவன் கோவிலில், சிவபெருமானுக்கு சிறப்பு அபிேஷகம் வழிபாடு நடந்தது. அதையடுத்து, சிவபெருமானுக்கு அன்னம் சாத்தப்பட்டு, அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது. வால்பாறைவால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் சன்னதியில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு அன்னாபிேஷக விழாவையொட்டி நேற்று 24 ல்மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம்பூஜை நடந்தது.பக்தர்கள் கொடுத்த அரிசி, பருப்பு, காய்கறிகள், இனிப்பு உள்ளிட்ட பொருட்களை கொண்டு சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பின், காசிவிஸ்வநாதர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.