சின்னசேலம்: தென்பொன்பரப்பியில் உள்ள சொர்ணபுரீஸ்வரர், செஞ்சி பீரங்கிமேடு அருணா சலேஸ்வரர், அவலூர்பேட்டை ராமலிங்க சாமூண்டீஸ்வரி அம்மன், செஞ்சி அடுத்த ஆலம் பூண்டி ஆலாகாலேஸ்வரர், திண்டிவனம் கீழ்பசார் சந்திரமவுலீஸ்வரர் மற்றும் சங்கராபுரம் பாலமேடு ஏகாம்பரேஸ்வரர் அன்னாபிஷேகத்தில் அருள்பாலித்தனர்.
ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் மகா அன்னா பிஷேகம் நடந்தது. செஞ்சி அடுத்த செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில் அம்மன் காய்கனி அலங்காரத்தில் அருள்பாலித்தார். செஞ்சி அடுத்த செத்தவரை மோனசித்தர் ஆசிரமத்தில் சொக்கநாதருக்கு நடந்த அபிஷேக விழாவில் சிவஜோதி மோனசித்தர் தலைமையில் மகா தீபாராதனை நடந்தது.
திருக்கோவிலூர், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவில், கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோவில் மற்றும் மேல்மலை யனூர் அடுத்த பெருவளூர் கோட்டீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நடந்தது.