பதிவு செய்த நாள்
25
அக்
2018
12:10
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி, விருத்தகிரீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடந்தது.
ஐப்பசிமாத பவுர்ணமியையொட்டி, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று காலை பெரியநாயகி உடனுறை பெரியநாயகருக்கு 1008 சங்காபிஷேகம் நடந்தது. அதையடுத்து, மாலை 6:00 மணியளவில் மூலவர் விருத்தகிரீஸ்வரருக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்து, காய்கறி, பழங்கள், மலர்களால் அலங்கரித்து மகாதீபாராதனை நடந்தது. அதையடுத்து, அபிஷேகம் செய்யப்பட்ட சாதத்தை பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இதில், ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர். அதேபோல், விருத்தாசலம், பெண்ணாடம் சாலையிலுள்ள ஏகநாயகர் கோவிலில் அன்னத்தால் அபிஷேகம் செய்து, அலங்காரம் செய்து மகாதீபாராதனை நடந்தது. மேலும், விருத்தாசலம் அடுத்த நல்லுார் வில்வவனேஸ்வரர் கோவிலில் மூலவருக்கு அன்னபிஷேகம் செய்து காய்கறி, பழங்கள், மலர்களால் அலங்கரித்து, மகாதீபாரதனை செய்யப்பட்டது. அதேபோல், முதனை முதுகுன்றீஸ்வரர் கோவில்களிலும் அன்னாபிஷேகம் நடந்தது.