பழநி: பழநி முருகன் மலைக்கோயிலில் தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. கோயில் இணை ஆணையர் செல்வராஜ் தலைமை வகித்தார். துணை ஆணையர்(பொ) செந்தில்குமார், செயற் பொறியாளர் சக்திவேல் முன்னிலை வகித்தனர்.பழநி தீயணைப்பு அலுவலர் கமலக்கண்ணன், தீ விபத்து ஏற்படும்போது மேற்கொள்ளவேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கை குறித்து பேசினார். காஸ் சிலிண்டரில் தீஅணைக்கும் முறைகள், மயங்கிவிழும் பக்தர்களை காப்பற்றுவது, முதலுதவி சிகிச்சைப்பற்றி செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தார்.இணை ஆணையர் செல்வராஜ் குழுவினர் மலைக்கோயிலில் பிளாஸ்டிக், பாலிதீன் ஒழிப்பு துண்டு பிரசுரங்களை பக்தர்களுக்கு வழங்கினர். பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணிப்பைகள் பயன்படுத்த வலியுறுத்தினர். கோயில் பொறியாளர்கள், செக்யூரிட்டிகள், பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.