தாண்டிக்குடி: தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் கார்த்திகை விழா நடந்தது. விழாவில் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. விளக்குப் பூஜை மற்றும் பஜன் நடந்தன. மலைக்கோயிலில் 27 நட்சத்திரங்களுக்கு உகந்த மரக்கன்றுகளுக்கு ஆராதனை நடந்தது. மலைக்கோயிலில் தேரோட்டம் நடந்தது.
நத்தம்: நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி மாத கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர், தயிர், மஞ்சள் நீர், விபூதி, தேன், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து ராஜ அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. இதே ேபால் நத்தம் கைலாசநாதர் கோயிலில் உள்ள தண்டபாணி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது.