பதிவு செய்த நாள்
27
அக்
2018
11:10
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், ஐப்பசி கிருத்திகை விழாவில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். ஸ்ரீபெரும்புதுார் அருகே வல்லக்கோட்டையில், 1,200 ஆண்டுகளுக்கு பழமையான சுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு, 7 அடி உயரத்தில், வள்ளி - தெய்வானையுடன் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஐப்பசி கிருத்திகை விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு, மூலவருக்கு பரணி அபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து நேற்று காலை, 4:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில், முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.