Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வாழ்வில் நிம்மதி பெற ஸ்வாமிகள் ... குருவாயூரப்பனிடம் அபார பக்தி
முதல் பக்கம் » கோவிந்த தாமோதர ஸ்வாமிகள்
ஸ்வாமிகளின் பெருமை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 அக்
2018
03:10

ஸ்வாமிகள் பாகவதத்தில் சொல்லியிருக்கிறபடி பகவத் சரித்திரங்களைப் பாராயணம் செய்து கொண்டும் ச்ரவணம் செய்து கொண்டும், மனனம் செய்து கொண்டும் இருந்தார். அவருடைய ரோம கூபங்களில் கூட ஸ்ரீமத் பாகவதம், ராமாயணம், நாராயணீயம் தான் இருந்து வந்தது. இந்த நூற்றாண்டில், நமது சமீபத்தில் இருந்து கொண்டு, பாகவதத்திலேயே மூழ்கிக் கொண்டு, பகவத் பக்தியின் பெருமையைத் தன்னிடம் வருபவர்களிடம், ப்ரவசனத்தின் மூலமும் வாழ்ந்து காட்டுவதன் மூலமும் விளக்கிக் கொண்டு பக்தர்களுக்கு மன நிம்மதியைக் கொடுத்து வந்தார். பக்தியை வளர்த்துக் கொண்டு, தான்  தன் வாழ்க்கையை க்யாதி, லாப, பூஜை (க்யாதி - புகழ், லாப - பணம், பூஜை - கவுரவம்) இவைகளில் ஈடுபடாமல் இருந்து நடத்திக் காட்டினார்.

வேதாந்த தேசிகனின் குமாரர் தன் தகப்பனாரைப் பற்றி செய்த ச்லோகத்தில், க்யாதி, லாப பூஜையில் மனம் வைக்காதவர் என்று சொல்லியிருக்கின்றதை ஒரு வைஷ்ணவர் மூலம் கேட்டத்திலிருந்து ஸ்வாமிகளும் இந்த மூன்றிலும் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் பகவானையும், மஹாபெரியவாளையும் தினம் ப்ரார்த்தித்துக் கொள்ளுவதை வழக்கமாக வைத்துக் கொண்டு விட்டார்.

‘கலியுக ப்ரவர்த்தித கார்த்தயுக வ்ருத்தாந்த ஹே ஸத்குரோ
க்யாதி லாப பூஜாஸு வைமுக்யம் மே ஆகலய ’

என்று அவரும்  மஹா பெரியவாளை த்யானித்துக் கெண்டு பிரார்த்தனை செய்து வந்ததுடன் அவரிடம் வருபவர்களையும் இந்த ச்லோகத்தை சொல்லிப் பிரார்த்தனை செய்யும்படி உபதேசித்திருக்கிறார்.

ஒருமுறை 1968ல் ஸ்ரீமத் ராமாயண நவாஹ பாராயணம், குரோம்பேட்டையில் செய்து வரும்போது 4 நாட்கள சில காரணங்களால் பாராயணம் செய்ய முடியாத நிர்ப்பந்தம் ஏற்பட்ட போது 28 மணி நேரம் இடைவிடாமல் பாராயணம் செய்து நவாஹத்தை 9வது நாளன்று பட்டாபிஷேகத்துடன் பூர்த்தி செய்தார். அவர் தகப்பனார் இந்த மாதிரி இடைவிடாமல் பாராயணம் செய்திருப்பதால் அவருடைய அனுக்ரஹத்தில் நடந்தது என்பார்.

தொடர்ந்தால் போல 68 நாட்கள் ஸ்ரீமத் சுந்தரகாண்டம் தினமும் முழுப்பாராயணம் செய்திருக்கிறார். இதைப் போன்று 5 தடவைகள் செய்திருக்கிறார். இவ்வாறு தொடர்ந்து செய்து வரும் நாட்களில் ஸ்ரீமத் பாகவத ஸப்தாஹ பாராயணம் உபன்யாசத்துடன் நடந்தால் இரவு 9 மணி முதல் 12.30 வரையில் ஸ்ரீமத் சுந்தர காண்ட பாராயணத்தையும் செய்திருக்கிறார்.

இந்த மாதிரி தன் சரீர சிரமத்தைப் பார்க்காமல் பகவத் பஜனத்தை ஆத்மார்த்தமாக செய்து வந்தார் என்பதைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. இந்தக் கலியில் இந்த மாதிரி மஹா புருஷர்களைக் காண்பது அரிது.

ஒருதடவை 1978ல் கோகுலாஷ்டமி சமயத்தில் மஹா பெரியவாள் சன்னிதியில் இவர் பாராயணம் செய்து கொண்டிருக்கும் போது ஒரு பக்தர் ஒரு குறையை மஹாபெரியவாளிடம் தெரிவித்த போது அங்கே ஸ்ரீமத் பாகவதம் படித்துக் கொண்டிருக்கிறவரிடம் சென்று கற்கண்டு பிரசாதம் வாங்கிக் கொண்டு போகும்படி உத்திரவு செய்து உன் சிரமம் விலகிவிடும் என்றும் அனுக்ரஹம் செய்தார். இந்த விஷயம் நடந்ததிலிருந்து மஹாபெரியவாள் இந்தக் கற்கண்டு பிரசாதத்திற்குக் கொடுத்திருக்கிற மதிப்பைத் தெரிந்து கொண்டு தன்னிடம் வரும் பக்தர்களுக்கு விடைபெற்று செல்லும் போது கற்கண்டு பிரசாதம் கொடுக்கும் வழக்கத்தை ஸ்வாமிகள் வைத்துக் கொண்டார்.

ஸ்வாமிகள் எங்குத் தங்கியிருந்தாரோ அந்த இடமே தெய்வீகக் களை பொருந்தியதாக இருக்கும். காலை எழுந்திருந்தது முதல் இரவு படுக்கச் செல்லும் வரை பகவந் நாம ஜபம், ஸ்ரீமத் பாகவத, ராமாயண, நாராயணீயம், பகவத் கீதை, விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணங்கள், குருவாயூரப்பன் பூஜை முதலிய காரியங்கள் தான் எப்போதும்  நடந்து கொண்டிருக்கும். லௌகீக விஷயங்களே பேசமாட்டார்கள் வருகிறவர்கள் தங்கள் குறைகளையும் சிரமங்களையும் தெரிவித்தால் பகவத் பரமாக ஸ்தோத்ர பாராயணம், நாம ஜபம் இவைகளைத்தான் பரிகாரமாகச் சொல்லுவார். வந்தவர்கள் மன நிம்மதியுடன் செல்லுவார்கள். படித்தவர், பாமரர், ஏழை பணக்காரர் என்ற வேறுபாடின்றி தன்னிடம் வந்த அனைவருக்கும் இறைவன் பெயரால் ஆறுதல் அளிப்பார். ‘சிவ சிவ ’ ‘ராம ராம ’ என்ற பகவானின் நாமங்களைத் தனிமையில் இடையறாது, மனமுருகி ஜபித்து வந்தாலே ‘பற்றுகள் ஒழிந்து பகவானை அடையலாம் ’ என்று எளிமை வழியில் உயர்வடைய உபதேசித்து வந்தார்.

தான் சொந்தமாகப் பாராயணம் செய்வதைத் தவிர தன்னிடம் அனேகமாக தினம் வருபவர்களுக்கு மூகபஞ்சசதி, பகவத்கீதை, விஷ்ணு ஸஹஸ்ரநாமம், ஸ்ரீமத் பாகவதம், ராமாயணம், நாராயணீயம், சங்கர பகவத் பாதாள அவர்களால் அருளி செய்யப்பட்ட ஸ்தோத்திரங்களை, தான் சொல்லி அவர்கள் திருப்பி சொல்லும்படி செய்து (அத்யயனமாக) பிறகு அவர்களே அந்த க்ரந்தங்களைத் தானே பாராயணம் செய்யும்படி அனுக்ரஹித்திருக்கிறார். இந்த மாதிரி நிறைய பக்தர்கள் ஸ்வாமிகளுடைய கடைசி 10 வருஷங்களில் பாக்யம் அடைந்திருக்கிறார்கள். தனக்கு உடம்பு அசவுகர்யம் அதிகமான பிறகு தன்னால் அதிகமாக பாராயணம் செய்ய முடியாத போது மத்தியானத்திற்கு மேல் இரவு 9 மணி வரையில் இந்த பக்தர்கள் ஒவ்வொருவரும் வந்து தரிசனம் செய்து விட்டு இந்த ஸ்தோத்ர பாராயணத்தை ஸ்வாமிகள் சன்னிதியில் செய்யும் போது அவர் ச்ரவணம் செய்வார்.

‘பிரம்மம் ஒன்றே அனைத்து தெய்வங்களாகவும் ப்ரகாசிக்கிறது’ என்ற எண்ணத்துடன் ஸ்வாமிகள் இருந்ததால் ஷண்மதத்தில் உள்ள எந்த தெய்வத்தின் ஸ்தோத்ரங்களை சொல்லும் போதும் அதன் அர்த்தங்களை நன்றாக அனுபவித்து அந்த ஸ்தோத்திரத்திலேயே மூழ்கி மன உருக்கத்துடனும் பக்தியுடனும் பாராயணம் செய்வார். அங்கு வருபவர்கள் எந்த ஸ்தோத்ரத்தை பாராயணம் செய்தாலும் அந்த தெய்வத்தின் தியானத்தில் இருந்து அவர் கேட்பார்.

ஒரு தடவை ஸ்வாமிகளை தரிசனம் செய்து விட்டு அவர் வாக்குகளை கேட்டுவிட்டுச் சென்றவர்கள் அடிக்கடி வந்து தரிசனம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்ற எப்பொழுதெல்லாம் வரமுடியுமோ அப்பொழுதெல்லாம் வருவார்கள். வெளியூர் பக்தர்கள்  எப்போதும் எந்த வேலையாக சென்னைக்கு வந்தாலும் ஸ்வாமிகளை தரிசனம் செய்யாமல் ஊருக்குத் திரும்ப மாட்டார்கள்.

2003 ஜனவரியிலிருந்து உடம்பு (தேக அவுகரியம்) சிரமம்அதிகமாக இருந்ததால் தாம் முடிந்த வரையில் ஸ்ரீமத் நாராயணீயத்தில் 4, 5 தசகங்களையும் ஸ்ரீமத் பாகவதத்தில் கஜேந்திர மோக்ஷ ஸ்தோத்திரத்தையும் 11 வது ஸ்கந்த கடைசி அத்தியாயத்தில் 14 ச்லோகங்களையும் (க்ருஷ்ணர் வைகுண்டாரோஹணம் செல்வது) பாராயணம் செய்து வந்தார். பக்தர்கள் வந்து செய்கிற ஸ்ரீமத் பாகவத பாராயணம் (தினம் ஒரு அத்யாயம்) ஸ்ரீமத் பகவத்கீதையில் ஒரு அத்தியாயம், ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ரம், விஷ்ணு ஸஹஸ்ர நாமம் இவைகளை ச்ரவணம் செய்து வந்தார். எப்போதும் புன்சிரிப்புடனும் சாந்தமான முகத்துடனும் காணப்படுவார். அவரிடத்தில் பகவத் ஸாந்நித்யம் எப்போதும் இருக்கும்.

மஹா பெரியவாள் கோகுலாஷ்டமி ஸப்தாஹம் செய்யும்படி உத்தரவு செய்த உடனே தனக்கு மஹா பெரியவாள் ஸன்னிதியில் பாகவத பாராயணம் செய்ய யோக்யதை கிடையாது. தோடகாஷ்டகத்தைச் சொல்லி மஹா பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்து கொண்டுதான் ஆரம்பிக்க வேண்டும். அவர் அனுக்ரஹத்தில்தான் பாராயணம் பிரவசனம் செய்ய முடியும் என்ற எண்ணத்தோடு தான் ஒவ்வொரு தடவையும் பாராயணம், ப்ரவசனம் செய்து வந்தார். கடைசி வரையில் மஹா பெரியவாள் ஸ்வாமிகள் உபந்யாசத்தை கேட்டு விட்டு ஒரு திருத்தமும் சொன்னதில்லை. ரொம்ப சிலாகித்தே சொன்னார். உபந்யாசத்தை கேட்டு விட்டு மஹா பெரியவாள் அடிக்கடி கையை தூக்கி ரொம்ப ரசித்து ஒரு தடவை ஸ்வாமிகளை ‘மஹா பிரபு’ என்று குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார்.

ஆங்கரை பெரியவரிடம் பாராயண ப்ரவசநம் கேட்க ஆரம்பித்ததற்கு ரொம்ப வருஷங்கள் முன்பு சில சமயங்களில் மாயவரம் சிவராமக்ருஷ்ண சாஸ்திரிகளை பாகவத உபந்யாசம் செய்யச் சொல்லி மஹாபெரியவாள் ச்ரவணம் செய்திருக்கிறார். வேறு ஒருவரிடமும் கேட்டதில்லை.

சிவன் சார் ‘ஏணிப்படிகளில் மாந்தர்கள்’ புஸ்தகத்தில் ‘ஊழ்வினை ’ என்ற தலைப்பின் கீழ் எழுதிய விஷயங்களை, 1951 லேயே சென்னை வந்த பின்பு அவருக்குள்ள குடும்ப, சரீர கஷ்டங்களைப் பார்த்து சிலர் வருத்தம் தெரிவிக்கும் போது, அவர்களுக்கு எடுத்து சொல்லி வருவார். பூர்வஜன்ம புண்ணிய பாவங்களைப் பொறுத்துத் தான் வாழ்க்கை அமையும். பூர்வ ஜன்ம பாபத்தால் கஷ்டங்களை அனுபவித்து கொண்டு இருக்கும்போது, மேலும் இப்போது பாவ காரியங்களில் ஈடுபடாமல் தடுத்துக் கொண்டு பகவத் பஜனத்தை செய்து வந்தால் மனஸ் சாந்தியுடன் இருக்க முடியும் என்பார்.

 
மேலும் கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் »
temple news
ஸ்வாமிகளின் திரு அவதாரம். திருச்சிராப்பள்ளியில், சுக்ல வ்ருஷம் மாசி மாதம் 18- ஆம் தேதி (01/03/1930) சனிக்கிழமை ... மேலும்
 
எஸ்.எஸ்.எல்.சி. தேறிய நம் ஸ்வாமிகள் வேலை கிடைக்கும் வரையில் பிக்ஷாண்டார் கோயிலில் தமக்கை வீட்டில் வாசம் ... மேலும்
 
1956ல் மயிலாப்பூர் க்ருஷ்ண கணபாடிகளின் இரண்டாவது பெண் சவுபாக்கியவதி மீனாக்ஷி என்பவளுடன் விவாஹம் ... மேலும்
 
1969ல் காஞ்சி மஹாபெரியவாளை தரிசனம் செய்தபோது அவரிடம், தன் தகப்பனார் தலைமுறை வரையில் முன்னோர்கள் ... மேலும்
 
ஸ்வாமிகள் தன் வாழ் நாளில் உத்தேசமாக கீழ்க்கண்ட பாராயணங்கள்/உபன்யாஸங்கள் பகவத் க்ருபையால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar