விழுப்புரம்: அரசூரில், மழை வேண்டி வருணபூஜை நடந்தது.அரசூர் மலட்டாற்றில், மழை வேண்டி ஜீவநதி மலட்டாறு நிலத்தடி நீர் மேம்பாட்டு எழுச்சி கூடல் அமைப்பின் சார்பில், வருணபூஜை நடந்தது. அமைப்பின் தலைவர் தட்சணாமூர்த்தி தலைமை தாங்கினார்.வேதவிற்பன்னர்கள் யாககுண்டம் அமைத்து கணபதி பூஜை, லட்சுமி பூஜை மற்றும் வருண ஜெபம் நடத்தினர். பின், யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட கலச நீரை ஆற்றில் கொட்டினர்.இதில் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கூட்டுப்பிரார்த்தனை செய்து, வழிபட்டனர்.