தேவாரம்: தேவாரத்தில் முத்தாலம்மன் கோயில் திருவிழா இரண்டு நாட்கள் நடைபெற்றது. ஜமின்தார் சிவராஜபாண்டியன் தலைமை வகித்தார். கிராம தேவதைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நேற்றுமுன்தினம் தேவாங்கர் சமூகம் சார்பில் திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. நகர்வலமாக அரண்மனைக்கு கொண்டு வரப்பட்டு, கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். நேற்று ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு பெரியதேவி கண்மாயில் விஜர்சனம் செய்யப்பட்டது.