பெ.நா.பாளையம்: வெள்ளமடை தர்மராஜா கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. வெள்ளமடையில் தர்மராஜா கோவில், வெள்ளை விநாயகர் கோவில், பக்த ஆஞ்சநேயர் கோவில்கள் உள்ளன. இங்கு முன்மண்டபம் கட்டப்பட்டுள்ளது. ஆஞ்சநேயர் கோவில் முன்கொடி மரம் பிரதிஷ்டைசெய்யப்பட்டுள்ளது. வெள்ளை விநாயகர் கோவிலில் விமான திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் கால யாக பூஜைகள் நடந்தன. தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின், அன்னதானம், சுவாமி வீதியுலா புறப்பாடு நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.