Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மஹா லக்ஷ்மிக்குரிய அங்க பூஜை தனாகர்ஷண ஸ்ரீமஹாலக்ஷ்மீ ஸஹித குபேர ...
முதல் பக்கம் » சம்ப்ரதாய விரத பூஜா விதானம் » 15. லக்ஷ்மீ குபேர பூஜை
நைவேத்ய மந்திரங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2018
04:11

(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து நைவேத்தியங்களை வைக்கவும்.)

ஓம் பூர்ப்புவஸ்ஸுவ:
(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து மந்திரம் சொல்லி தீர்த்தத்தை நைவேத்ய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விடவேண்டும்.)

ஓம் தத்ஸவிதுர்வரேண்யம் பர்க்கோ தேவஸ்ய
தீமஹி ஐ தியோ யோ ந: ப்ரசோதயாத்
(உத்தரணியால் / கையில் தீர்த்தம் எடுத்து, நிவேதனப் பொருள்களைப் ப்ரோக்ஷிக்கவும்)

தேவஸவித: ப்ரஸுவ
ஸத்யம்த்வர்த்னே பரிஷிஞ்சாமி (காலையில்)
(உத்தரணியால்/கையில் தீர்த்தம் எடுத்து, நிவேதனப்பொருள்களை தீர்த்தத்தால் ப்ரதக்ஷிணமாகச் சுற்றவும்)

அம்ருதோபஸ்தரணமஸி
(என்று கிண்ணத்தில் கொஞ்சம் தீர்த்தம் விடவும்.)

(பிறகு கையில் கொஞ்சம் புஷ்பம் எடுத்துக்கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்லி ஒவ்வொரு முறையும் “ஸ்வாஹா ” என்று சொன்ன பிறகு படத்தில் உள்ளது போல் ஸ்வாமியின் பக்கம் கையால் காண்பித்து நைவேத்யம் பண்ணவும்.)

ஓம் ப்ராணாய ஸ்வாஹா ஓம் அபானாய ஸ்வாஹா
ஓம் வ்யானாய ஸ்வாஹா ஓம் உதானாய ஸ்வாஹா
ஓம் ஸமானாய ஸ்வாஹா ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா

ஆர்த்ராம் ய: கரிணீம் யஷ்டிம் பிங்களாம் பத்மமாலினீம்
சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவஹ

பாயஸாபூப பக்ஷ்யாணி சாகாத்யன்னானி ஸாம்ப்ரதம்
நிவேதயாமி ஸர்வ ஸ்ரீயக்ஷராஜ க்ருஹாண போ

ஸ்ரீதனாகர்ஷண ஸ்ரீமஹாலக்ஷ்மீ ஸஹித ஸ்ரீகுபேராய நம:
பாயஸம், குடாபூபம், இதர பக்ஷ்யாணி, சாகாதீனி, அன்னானி,
பலானி, ஏதத்ஸர்வம், அம்ருதம்
மஹா நைவேத்யம் யதா சக்தி நிவேதயாமி
(என்று நைவேத்யம் செய்யவும்)

மத்யே மத்யே பானீயம் ஸமர்ப்பயாமி
(உத்தரணியாலே தீர்த்தம் எடுத்துக் கிண்ணத்தில் விடவும்)

அம்ருதாபிதாநமஸி
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(உத்தரணியாலே தீர்த்தம் எடுத்துக் கிண்ணத்தில் விடவும்)

ஸர்வாண்யேதானி மே ப்ரீத்யா ருசியுக்த பலானி ச
குர்யாத் ஸபலம் சீ’க்ரம் யக்ஷேச ’ புவனேச்’வரி
ஸ்ரீதனாகர்ஷண ஸ்ரீமஹாலக்ஷ்மீ ஸஹித ஸ்ரீகுபேராய நம:
ஸர்வகார்ய ஸபல ஸித்யர்த்தம் பலானி ஸமர்ப்பயாமி
(உத்தரணியால் தீர்த்தம் எடுத்து பழங்களின் மேல் தெளிக்கவும்)

தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீம் அபநபகாமினீம்
யஸ்யாம் ஹிரண்யம் ப்ரபூதம் காவோ
தாஸ்யோஸ்வான் விந்தேயம் புருஷாநஹம்

முக கந்தகரம் திவ்யம் கற்பூராதி யுதம் சு’பம்
தாம்பூலம் க்ருஹ்யதாம் தேவ மஹாலக்ஷ்மீ ச தே ந:

ஸ்ரீதனாகர்ஷண ஸ்ரீ மஹாலக்ஷ்மீ ஸஹித
ஸ்ரீகுபேராய நம: கற்பூர ஏலாதி ஸஹித
தாம்பூலம் ஸமர்ப்பயாமி
(உத்தரணியால் தீர்த்தம் எடுத்து, தாம்பூலத்தில் விடவும்)

ஹிரண்ய கர்ப்ப கர்ப்பஸ்த்தம் ஹேமபீஜம் விபாவஸோ:
அனந்த புண்ய பலதம் அத: சா ’ந்திம் ப்ரயச்ச மே
ஸ்ரீதனாகர்ஷண ஸ்ரீமஹாலக்ஷ்மீ ஸஹித
ஸ்ரீ குபேராய நம: யத்கிஞ்சித் தக்ஷிணாம் ஸமர்ப்பயாமி
(முழு நாணயத்தை ஸமர்ப்பிக்கவும்)
(கற்பூரத்தை ஏற்றி, பின்வரும் மந்த்ரத்தைச் சொல்லி, ஸ்வாமிக்கு காண்பிக்கவும்.)

ஓம் ஸோமோ வா ஏதஸ்ய ராஜ்யமாதத்தே
யோ ராஜாஸன் ராஜ்யோ வா ஸோமேந யஜதே
தேவ ஸுவாமேதாநி ஹவீகும்ஷி பவந்தி
ஏதாவந்தோ வை தேவாநாகும் ஸவா:
த ஏவாஸ்மை ஸவான் ப்ரயச்சந்தி
த ஏனம் புநஸ்ஸுவந்தே ராஜ்யாய
தேவஸுரராஜாபவதி

ந தத்ர ஸுர்யோ பாதி ந சந்த்ர தாரகம்
நேமாவித்யுதோ பாந்தி குதோ (அ) யமக்நி:
தமேவ பாந்தமநுபாதி ஸர்வம்
தஸ்யபாஸா ஸர்வமிதம் விபாதி

ராஜாதி ராஜாய ப்ரஸஹ்ய ஸாஹினே நமோ வயம்
வைச் ’ரவணாய குர்மஹே ஸ மே காமான் காம காமாய
மஹ்யம் காமேச்’வரோ வைச்ரவணோ ததாது குபேராய
வைச் ’ரவணாய மஹாராஜாய நம:

ஸ்ரீதனாகர்ஷண ஸ்ரீ மஹாலக்ஷ்மீ ஸஹித
ஸ்ரீகுபேராய நம: கற்பூர நீராஜனம் ஸமர்ப்பயாமி
(கற்பூர மங்கள ஹாரத்தி காட்டவும்)

நீராஜநாந்தரம் ஆசமநீயம்
ஸமர்ப்பயாமி
(உத்தரணியால் தீர்த்தம் எடுத்து கிண்ணத்தில் விடவும்)

(கையில் புஷ்பங்களை வைத்துக்கொண்டு, பின்வரும் மந்த்ரங்களைச் சொல்லி ஸ்வாமிக்கு ஸமர்ப்பிக்கவும்.)

மயா தத்தம் ச பக்த்யா த்வம் பாதபத்மே ஸமர்ப்பிதம்
புஷ்பாஞ்ஜலிம் க்ருஹாணாத்ய குபேர ஸ்ரீ ப்ரியம்வதே
ஸ்ரீதனாகர்ஷண ஸ்ரீ மஹாலக்ஷ்மீ ஸஹித
ஸ்ரீகுபேராய நம: புஷ்பாஞ்ஜலிம் ஸமர்ப்பயாமி
(புஷ்பங்களை ஸமர்ப்பிக்கவும்)

மந்த்ர புஷ்பம் க்ருஹாணேதம் மயா பக்த்யா ப்ரபூஜிதம்
மங்களே மஹிதேமாத: தனாத்யக்ஷ நமோ (அ)ஸ்து தே

யோ பாம் புஷ்பம் வேத புஷ்பவான் ப்ரஜாவான் பசு’மான் பவதி
சந்த்ரமா வா அபாம் புஷ்பம் புஷ்பவான் ப்ரஜாவான்
பசு’மான் பவதி ய ஏவம் வேத யோபா மாயதனம் வேத
ஆயதனவான் பவதி

ஸ்ரீதனாகர்ஷண ஸ்ரீ மஹாலக்ஷ்மீ ஸஹித
ஸ்ரீகுபேராய நம: வேதோக்த மந்த்ர
புஷ்பம் ஸமர்ப்பயாமி
(புஷ்பங்களை ஸமர்ப்பிக்கவும்)

(பின்வரும் ஸ்லோகங்களைச் சொல்லி பிரதக்ஷிண நமஸ்காரம் செய்யவும்.)

யானிகானி ச பாபானி ஜன்மாந்த்ர க்ருதானி ச
தானிதானி விநச் ’யந்தி ப்ரதக்ஷிண பதே பதே
ஸர்வ மங்கள மாங்கல்யே சி’வே ஸர்வார்த்த ஸாதிகே
சரண்யே த்ரியம்பிகே தேவி நாராயணி நமோ (அ) ஸ்துதே
வித்தேசா ’ய குபேராய ராஜ ராஜாய யக்ஷஸே
தானத்யக்ஷாய ஸ்ரீ தாய ஏகபிங்காயதே நம:

ஸ்ரீதனாகர்ஷண ஸ்ரீ மஹாலக்ஷ்மீ ஸஹித
ஸ்ரீகுபேராய நம: ப்ரதக்ஷிண நமஸ்காரன் ஸமர்ப்பயாமி
(நமஸ்காரம் செய்யவும்.)

ராஜ உபசாரங்கள்:

(ஸ்வாமியை மகிழ்வித்து மரியாதை செய்வதற்காக சத்ரம், சாமரம் முதலிய உபசாரங்களை செய்கிறோம். இந்த உபசாரங்களுக்கு பதிலாக புஷ்பம் அக்ஷதைகளை ஸமர்ப்பிக்கலாம்.)

சத்ரம் ஸமர்ப்பயாமி     (குடை அளித்தல்)
சாமரம் ஸமர்ப்பயாமி     (சாமரத்தால் வீசுதல்)
வ்யஜனம் ஸமர்ப்பயாமி     (விசிறியால் வீசுதல்)
கீதம் ஸமர்ப்பயாமி     (பாட்டுப் பாடுதல்)
ந்ருத்யம் ஸமர்ப்பயாமி    (நடனம் ஆடுதல்)
வாத்யம் ஸமர்ப்பயாமி     (வாத்யம் இசைத்தல்)
ஆந்தோளிகாம் ஸமர்ப்பயாமி    (ஊஞ்சலில் ஆட்டுதல்)

ஸ்ரீதனாகர்ஷண ஸ்ரீ மஹாலக்ஷ்மீ ஸஹித
ஸ்ரீகுபேராய நம: ஸமஸ்த ராஜோபசாரான் ஸமர்ப்பயாமி

பிரார்த்தனை

(அனைவரும் நின்று கொண்டு, பின்வரும் ஸ்லோகத்தைச் சொல்லி ப்ரார்த்தனை செய்யவும்.)

யாஸா பத்மாஸநஸ்த்தா விபுலகடி தடீ பத்ம பத்ராயதாக்ஷீ
கம்பீராவர்த்தநாபி: ஸ்தனபரநமிதா சு’ப்ரவஸ்த்ரோத்தரீயா

லக்ஷ்மீர்திவ்யை: கஜேந்த்ரை:
மணிகண கசிதை: ஸ்நாபிதா ஹேம கும்பை:

நித்யம் ஸா பத்ம ஹஸ்தா
மம வஸது க்ருஹே ஸர்வமாங்கள்ய யுக்தா

ஆயுராரோக்யம் ஐச் ’வர்யம் புத்ரபௌத்ராதிகான் வரான்
ச ’த்ருக்ஷயம் மஹாலக்ஷ்மீ ப்ரயச்’ச தனத ப்ரபோ

ஸ்வர்க்கேச ஸ்வர்க்க லக்ஷ்மீஸ்த்வம் மர்த்தயலக்ஷ்மீ ச் ’ச பூதலே
ராஜலக்ஷ்மீ ராஜகேஹே க்ருஹலக்ஷ்மீர் க்ருஹே க்ருஹே

ஸித்தலக்ஷ்மீர் மோக்ஷலக்ஷ்மீர் ஜயலக்ஷ்மீ ஸரஸ்வதி
ஸ்ரீலக்ஷ்மீர் வர லக்ஷ்மீச் ச ப்ரஸன்னா வரதா பவ

பத்ம ப்ரியே பத்மிநி பத்மஹஸ்தே
பத்மாலயே பத்ம தளாயதாக்ஷி
விச் ’வ ப்ரியே விஷ்ணுமநோ (அ) நுகூலே
த்வத் பாத பத்மம் மயிஸந்நிதத்ஸ்வ

புத்ர பௌத்ரம் தனம் தான்யம் ஹஸ்த்யச் ’வாதி கவேரதம்
ப்ரஜானாம் பவஸி மாதா ஆயுஷ்மந்தம் கரோது மே

(ஸ்ரீதனாகர்ஷண ஸ்ரீ மஹாலக்ஷ்மியையும் ஸ்ரீகுபேரனையும் ப்ரார்த்தித்துக்கொண்டு நமஸ்காரம் செய்யவும்)

அர்க்யப்ரதானம்

(பூஜை முடிந்த பிறகு, ஸ்வாமியை உத்தேசித்து, பாலால் அர்க்யம் விடவும். அர்க்யம் என்பது ஸ்வாமிக்கு மரியாதை மற்றும் திருப்திபடுத்தும் செயலாகும். இந்த செயல் தேவர்களை அல்லது ஸ்வாமியை குறித்து செய்யப்படுகையில் அர்க்யம் என்று கூறப்படுகிறது. பித்ருக்களை குறித்து செய்யப்படும் பொழுது இதே செயல் தர்ப்பணம் எனப்படுகிறது.)

அர்க்யம் / உபாயன தானம்

சு’க்லாம்பரதரம் விஷ்ணும் ச ’சி’வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சா ’ந்தயே

மம உபாத்த ஸமஸ்த துரிதயக்ஷத்வாரா ஸ்ரீ
பரமேச்’வர ப்ரீத்யர்த்தம் ஸ்ரீ தனாகர்ஷண ஸ்ரீ
மஹாலக்ஷ்மீ ஸஹித குபேர பூஜாந்தே பூஜாபல
ஸம்பூர்ணதா ஸித்யர்த்தம் க்ஷீரார்க்ய ப்ரதானம்
உபாயன தானம் ச கரிஷ்யே

‘அப உபஸ்ப்ருச் ‘ய ’
(உத்தரிணியில் தீர்த்தம் எடுத்துக் கைகளைத் துடைத்துக் கொள்ள வேண்டும்.)

(வலது கையில் அக்ஷதை, புஷ்பம், சந்தனம், குங்குமம் எடுத்துக் கொண்டு, பாலும், தண்ணீரும் கலந்த கிண்ணத்தை இடது கையினால் வலது கையில் மூன்று முறை ஊற்ற வேண்டும். அதை கீழே உள்ள தாம்பாளத்தில் விழுமாறு செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் ‘இதமர்க்யம் ’ என்று சொல்லும்போது இதைச் செய்ய வேண்டும்.)

யந்த்ர ஸித்தே மந்த்ரஸித்தே தந்த்ரஸித்தே ச சோ ’பனே
க்ருஹாணார்க்யம் மயாதத்தம் பூர்ணகாமே நமோ நம:
குபேர லக்ஷ்ம்யை நம:
இதம் அர்க்யம், இதம் அர்க்யம், இதம் அர்க்யம்

அனேன அர்க்யப்ரதானேன ஸ்ரீதனாகர்ஷண
ஸ்ரீமஹாலக்ஷ்மீ ஸஹித ஸ்ரீகுபேர: ப்ரீயதாம்

உபாயனதானம்

சாஸ்திரிகள் அல்லது வீட்டில் உள்ள பெரியவருக்கு கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்லி தானம் கொடுத்து அவர்கள் ஆசீர்வாதத்தைப் பெற வேண்டும்.

ஸ்ரீதனாகர்ஷண ஸ்ரீமஹாலக்ஷ்மீ ஸ்ரீகுபேர
ஸ்வரூபஸ்ய ப்ராஹ்மணஸ்ய இதம் ஆஸனம்
அமீதே கந்தா: ஸகலாராதனை: ஸ்வர்ச்சிதம்
(ஆஸனத்தில் அமரச்செய்து, சந்தனம் கொடுத்து, அக்ஷதை சேர்க்கவும்.)

ஹிரண்யகர்ப்ப கர்ப்பஸ்தம் ஹேமபீஜம் விபாவஸோ:
அனந்த புண்ய பலதம் அதஸ்சாந்திம் ப்ரயச்சமே

யக்ஷஸ்ரீ: ப்ரதிக்ருஹ்ணாதி யக்ஷஸ்ரீ: வை ததாதி ச
யக்ஷஸ்ரீ தாரிகா த்வாப்யாம் யக்ஷஸ்ரீ ச்’ரியே நமோ நம:

இதம் உபாயனம் ஸதக்ஷிணாகம் ஸதாம்பூலம் ஸ்ரீதனாகர்ஷண
ஸ்ரீமஹா லக்ஷ்மீ ஸஹித ஸ்ரீ குபேரப்ரீதிம் காமயமாநா:

ஸ்ரீதனாகர்ஷண ஸ்ரீமஹா லக்ஷ்மீ ஸஹித
ஸ்ரீகுபேரபூஜாபல ஸாத்குண்யார்த்தம்,

அஸ்மின் லோகே ஸமஸ்த மங்கள
அவாப்த்யர்த்தம், அஸ்மின் க்ருஹே

ஸர்வைச்’வர்ய அபிவ்ருத்யர்த்தம்,
ப்ராஹ்மணாய துப்யம் அஹம் ஸம்ப்ரததே ந மம!
(என்று தாம்பூலத்துடன் அளித்து, நமஸ்காரம் செய்யவும்)

க்ஷமா ப்ரார்த்தனை

(பூஜை செய்யும் காலத்தில் ஏற்பட்ட, ஆசாரம், க்ரியை, மற்றும் ஸம்பந்தமான தவறுகளுக்கு மன்னிப்புக் கோருதல்.)

(பின்வரும் ஸ்லோகத்தைச் சொல்லி கையில் அக்ஷதை புஷ்பம் வைத்துக் கொண்டு ஜலம் விடவும்.)

மந்த்ர ஹீனம் க்ரியா ஹீனம் பக்தி ஹீனம் ஸுரேச்’வரி
யத் பூஜிதம் மயாதேவி பரிபூர்ணம் ததஸ்துதே

த்வமேவமாதா ச பிதா த்வமேவ த்வமேவ
பந்துச்ச ஸகா த்வமேவ

த்வமேவ வித்யா த்ரவிணம் த்வமேவ
த்வமேவ ஸர்வம் மம தேவதேவ

ஆவாஹனம் நஜாநாமி ந ஜாநாமி விஸர்ஜ்ஜநம்
பூஜாம் சைவ நஜாநாமி க்ஷம்யதாம் தனதேச்’வரி

குஹ்யாதி குஹ்ய கோப்த்ரீ த்வம் க்ருஹாண
அஸ்மத் க்ருதம் ஜபம்

ஸித்திர்ப்பவது மே தேவி த்வத் ப்ரஸாதாத் மயிஸ்த்திரா
யதக்ஷர பதப்ரஷ்டம் மாத்ராஹீனம் து யத்பவேத்
தத்ஸர்வம் க்ஷம்யதாம் தேவீ: நாராயணி நமோ (அ)ஸ்துதே

விஸர்க்கபிந்து மாத்ராணி பத பாதாக்ஷராணி ச
நியூநாநி ச அதிரிக்தானி க்ஷம்யதாம் ஸ்ரீ தனேச் ’வரி
அன்யதா ச ’ரணம் நாஸ்தி த்வமேவ ச ’ரணம் மம
தஸ்மாத் காருண்ய பாவேன ரக்ஷ ரக்ஷ தனேஸ்வரி
(என்று ப்ரார்த்தித்து, லக்ஷ்மீ குபேரர்களிடத்தில் தவறுகளை மன்னித்து அருள்பாலிக்கும்படி வேண்டிக்கொள்ளவும். புஷ்பம், அக்ஷதைகளை ஸமர்ப்பிக்கவும்.)

ஸ்ரீதனாகர்ஷண ஸ்ரீமஹாலக்ஷ்மீ ஸஹித
ஸ்ரீகுபேராய நம: ஸமஸ்த உபசாரான் ஸமர்ப்பயாமி
அனயா பூஜயா ஸ்ரீ தனாகர்ஷண ஸ்ரீமஹாலக்ஷ்மீ
ஸஹித ஸ்ரீகுபேர: ப்ரீயதாம்
(புஷ்பாக்ஷதைகளை ஸமர்ப்பிக்கவும்)

காயேனவாசா மனஸேந்த்ரியைர்வா
புத்யாத்மனாவா ப்ரக்ருதே: ஸ்வபாவாத்
கரோமி யத்யத் ஸகலம் ப்ரஸ்மை
நாராயணாயேதி ஸமர்ப்பயாமி

ஓம் ஸர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணம் அஸ்து.

புனர் பூஜை / யதாஸ்த்தானம்

பூஜை செய்த அன்று, கலசம் மற்றும் யந்த்ரத்தை அப்படியே வைத்திருந்து, மறுநாள் காலை புனர் பூஜை செய்து யதாஸ்தானம் செய்யலாம். சுருக்கமாக அர்க்ய பாத்யாதி நிவேதனம், கற்பூரம் முதலிய உபசாரங்கள் செய்து

யதாஸ்தானம் செய்வதற்குரிய மந்த்ரம்

“ஸ்ரீதனாகர்ஷண ஸ்ரீமஹாலக்ஷ்மீ ஸஹித ஸ்ரீகுபேராய நம:”
“ஸ்ரீலக்ஷ்மீ குபேரம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி”
“சோபனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச ”

என்று சொல்லி அக்ஷதை போட்டு, யந்த்ரத்தை வடக்கே நகர்த்தவும்.

 
மேலும் சம்ப்ரதாய விரத பூஜா விதானம் 15. லக்ஷ்மீ குபேர பூஜை »
பூஜை செய்யும் முறை* ஐப்பசி மாதம் வருகிற அமாவாஸ்யை அன்று இப்பூஜை செய்வது உத்தமம்.* அம்பிகைக்கு உகந்த ... மேலும்
 

நவக்ரஹ பூஜை நவம்பர் 01,2018

நவக்ரஹ மண்டலம் அமைத்து, அதில் புஷ்பம் அக்ஷதைகளை போட்டு பூஜை செய்யவும்.மண்டலம் அமைக்கும் ... மேலும்
 
(‘நம:’ என்று சொல்லி முடித்ததும், குங்குமத்தாலோ, புஷ்பத்தாலோ அர்ச்சனை செய்யவும்.)ஓம் சபலாயை       ... மேலும்
 
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் குபேர லக்ஷ்ம்யை, கமல தாரிண்யை,தனாகர்ஷிண்யை ஸ்வாஹா(இதை தினமும் 108 தடவை ஜபித்தால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar