பதிவு செய்த நாள்
02
நவ
2018
11:11
கொச்சி : சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற உத்தரவில் தலையிட முடியாது. உத்தரவை நிறைவேற்றும் பொறுப்பு, மாநில அரசுக்கு உண்டு, என, கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
கேரளாவில் உள்ள, சபரி மலை அய்யப்பன் கோவிலுக்கு, அனைத்து வயது பெண்களும் செல்ல, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அனுமதி அளித்தது. சபரிமலை பிரச்னையில், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுக்கள், நவ., 13-ல் விசாரணைக்கு வர உள்ளன. அதுவரை பெண்கள் சபரிமலை செல்வதற்கு தடை விதிக்க வேண்டும் என, கேரள உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கூறியதாவது: உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தலையிட முடியாது. தீர்ப்பை அமல்படுத்தும் பொறுப்பு, மாநில அரசுக்கு உண்டு. அதற்கான ஏற்பாடுகளை தான், அரசு செய்கிறது. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.