Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை மண்டல, மகரவிளக்கு பூஜை ... சபரிமலை தீர்ப்பு: ஐகோர்ட் கைவிரிப்பு சபரிமலை தீர்ப்பு: ஐகோர்ட் கைவிரிப்பு
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
கார்த்திகை சீசனுக்கு தயாராகுமா சபரிமலை?
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கார்த்திகை சீசனுக்கு தயாராகுமா சபரிமலை?

பதிவு செய்த நாள்

01 நவ
2018
11:11

சபரிமலை : சபரிமலை அய்யப்பன் கோவிலில், பெண்களை, 18ம் படியேற வைக்கும் முயற்சியில், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், வெள்ள சேதத்துக்கு பின், பம்பை மற்றும் சன்னிதானத் தில் அடிப்படை வசதி களை மேற்கொள்ள, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கேரளாவில்,உள்ள சபரிமலையில், அய்யப்பன் பிரம்மச்சாரியாக வீற்றிருக்கிறார். இதனால், இங்கு, 10 - 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் செல்வதற்கு தடை இருந்தது.இந்நிலையில், சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அனுமதி அளித்தது.இதை நிறைவேற்றியே தீருவது என்ற அவசரத்துடன் களம் இறங்கியது, மாநில அரசு. ஆனால்,பக்தர்களின் போராட்டத்தால்,அரசின் முயற்சி தோல்வி அடைந்தது. இந்த பிரச்னையில் கவனம் செலுத்தும் அரசு, பம்பையிலும், சபரிமலை யிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து, கவலைபடவில்லை. சமீபத்தில்,கேரளாவை, வெள்ளம் புரட்டிப் போட்டது. பம்பையில் தேவசம் போர்டு கட்டடங்கள்,பக்தர்கள் தங்கும் விடுதிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. அடுக்குமாடி கழிப்பறை கட்டடங்கள் நொறுங்கி கீழே விழுந்தன.

அப்படி இருந்தும் ஐப்பசி மாத பூஜைக்காக, பம்பை யில் புனரமைப்பு பணிகள் ஏதும் நடக்கவில்லை. அடிப்படை வசதிகள் ஏதுமின்றி பக்தர்கள் சிரமத்துக்குள்ளாகினர். வெள்ளசேதத்துக்கு பின், சபரிமலை புனரமைப்பு நிவாரண நிதி என்ற பெயரில் பம்பை, சன்னிதானத்தில் திரும்பும் திசை யெல்லாம் நுாற்றுக்கணக்கில் உண்டியல்களை வைத்து, மாநில அரசு சிறப்பு வசூலில் ஈடுபட்டு வருகிறது. ஐப்பசி மாத பூஜையில் மட்டும், சபரிமலை உண்டியல் வருவாய், ௧ கோடி ரூபாய்க்கும் அதிகம். ஆனால் தேவசம் போர்டு, பக்தர்களுக்கு எந்த வசதியும் செய்யவில்லை. இதனால், மண்டல, மகரவிளக்கு காலங்களில் லட்சக்கணக்கான பக்தர் கள் கூடும்போது நிலைமை எப்படியிருக்குமோ என, பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இதற்கிடையே, சபரிமலை விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள சீராய்வு மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என, மனுதாரர்கள் தரப் பில், உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், நீதிபதிகள் இதை ஏற்க மறுத்து விட்டனர்.

ஆலோசனை கூட்டம் புறக்கணிப்பு: சபரிமலை, மண்டல மகரவிளக்கு காலத்தில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள், வெளி மாநில பக்தர்களுக்கு உதவுவது தொடர்பான முடிவுகள் எடுப்பதற்காக, அண்டை மாநிலங்களைச் சேர்ந்த, கோவில் நிர்வாக துறை அமைச்சர்கள் கூட்டம், திருவனந்தபுரத்தில் நேற்று நடந்தது. இதில், முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்பதாக இருந்தது. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட மாநில அமைச்சர்கள், இதில் பங்கேற்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த, முதல்வர் பினராயி விஜயனும், கூட்டத்தை புறக்கணித்தார்.கேரள அதிகாரிகள், தேவசம் போர்டு உறுப்பினர்கள் மட்டும் ஆலேசனை நடத்தினர். கூட்டத்தில், கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் பேசியதாவது: மழையால் பாதிக்கப்பட்ட பம்பை,நிலக்கல்லில்,ரூ. 25 கோடி செலவில் புனரமைப்பு பணிகள் நடக்கின்றன. இந்த பணிகள் அனைத்தும், வரும், 11-ம் தேதிக்குள் முடிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் 62 நாட்கள் தொடர்ந்து நடந்த மண்டல, மகர விளக்கு கால பூஜைகள் முடிந்து நேற்று நடை ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் மகர விளக்கு சீசனில் பக்தர்களின் தரிசனம் நேற்று இரவு நிறைவு பெற்றது. இன்று காலை ... மேலும்
 
temple news
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முந்தைய நாள் வரை நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாகவும் 430 கோடி ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar