Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
லகு பஞ்சாயதன பூஜை உத்தராங்க பூஜை
முதல் பக்கம் » சம்ப்ரதாய விரத பூஜா விதானம் » 30. லகு பஞ்சாயதன பூஜை
பஞ்சாயதன பூஜைக்கான ரூபங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2018
05:11

பஞ்சாயதன பூஜைக்கான ரூபங்கள்

1. மஹாகணபதி  சோணபத்ரம்,
2. அம்பிகை  ஸ்வர்ண ரேகா,
3. விஷ்ணு  சாளக்ராமம்,
4. ஆதித்யன்  ஸ்படிகம்,
5. சிவன்  பாணம், முதலிய ரூபம் இல்லாத, பூமியிலிருந்து கிடைக்கும் இயற்கையான தாதுக்கள்.

1. பூர்வாங்க பூஜைகள்

1. தீப மந்திரம்

(விளக்கை ஏற்றி வைத்து, தீபத்தைப் பார்த்து, இந்த மந்திரத்தை சொல்லி புஷ்பம் போடவும்)

தீபஜ்யோதி: பரம் ப்ரஹ்ம
தீபஜ்யோதிர் ஜனார்த்தன:
தீபோ ஹரது மே பாபம்
தீபஜ்யோதிர் நமோஸஸ்து தே

2. ஆசமனம்

(நமது வலதுகை விரல்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தெய்வம் குடியிருப்பதாக ஐதீகம். இதே போல் நமது அங்கத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு தெய்வம் வசிப்பதாகக் கூறப்படுகிறது. ஆசமனம், அங்கவந்தனம் ஆகியன செய்தால், நமது உள்ளமும், உடலும் சுத்தமாகிறது என்று சாஸ்திரங்கள் கூறுவதை நாம் உணர வேண்டும். எல்லா நித்ய கர்மாக்களுக்கும், வைதிக கர்மாக்களுக்கும் ஆசமனம், அங்க வந்தனம் இன்றியமையாததாகும்.)

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து வலது உள்ளங் கையில் விட்டுக்கொண்டு கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லி சப்தமின்றி எச்சில் படாமல் மூன்று முறை உட்கொள்ளவும்.) (ஆண்கள் மற்றும் பெண்களுக்கு)

ஓம் அச்யுதாய நம:
ஓம் அனந்தாய நம:
ஓம் கோவிந்தாய நம:

அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)

(ஒவ்வொரு மந்திரத்தை சொல்லும் போது அந்தந்த மந்திரங்களுக்கு நேர் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த விரல்களால் ஸ்பரிசத்துக் கொள்ள வேண்டும்.)

1. கேச ’வ  வலக்கைக் கட்டை விரல் வலக்கன்னம்
2. நாராயண  வலக்கைக் கட்டைவிரல் இடக்கன்னம்
3. மாதவ  வலக்கை மோதிர விரல் வலக்கண்
4. கோவிந்த  வலக்கை மோதிர விரல் இடக்கண்
5. விஷ்ணு  வலக்கை ஆள்காட்டிவிரல், வலது நாசி
6. மதுஸூதன  வலக்கை ஆள்காட்டி விரல், இடது நாசி
7. த்ரிவிக்ரம்  வலக்கை சிறுவிரல், வலது காது
8. வாமன  வலக்கை சிறுவிரல் இடது காது
9. ஸ்ரீதர  வலக்கை நடுவிரல், வலதுதோள்
10. ஹ்ருஷீகேச ’ வலக்கை நடுவிரல், இடது தோள்
11. பத்மநாப  நான்கு விரல்களும் சேர்த்து, நாபி (தொப்புள்)
12. தாமோதர  ஐந்து விரல்களும் சேர்த்து, தலை

குரு த்யானம்

குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு:
குருர்தேவோ மஹேச் ’ வர:
குருஸ்ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம
தஸ்மை ஸ்ரீகுரவே நம:

4. கணபதி தியானம்

இரண்டு கைகளிலும் அக்ஷதை எடுத்துக் கொண்டு படத்தில் உள்ளதுபோல் 5 முறை குட்டிக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.

சு’க்லாம்பரதரம் விஷ்ணும்
ச ’ சி’ வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோபசா ’ந்தயே

5. ப்ராணாயாமம்

(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கையிலும், மூச்சை மெதுவாக வெளியிடும் போதும், இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாகச் சொல்லக்கூடாது. படத்தில் உள்ளது போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டியது.)

ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ:, ஓம்
மஹ:, ஓம் ஜன:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம்
தத்ஸவிதுர் வரேண்யம், பர்க்கோ
தேவஸ்ய தீமஹி, தியோ யோ ந:
ப்ரசோதயாத் ஓமாபோ ஜ்யோதீ
ரஸ:, அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ்
ஸுவரோம்

(மந்திரம் சொல்லி முடித்தவுடன் வலது காதை தொடவும்.)

6. ஸங்கல்பம்

(வலது கையில் அக்ஷதையை எடுத்து, கையை மூடிக்கொண்டு, இடது கையுடன் சேர்த்து வலது தொடையில் வைத்துக் கீழ்கண்ட மந்திரம் சொன்ன பிறகு, அக்ஷதையை வடக்கே போடவும்.)

மமோபாத்த ஸமஸ்த துரித, க்ஷயத்வாரா ஸ்ரீ
பரமேச்’வர ப்ரீத்யர்த்தம்,
கரிஷ்யமாணஸ்ய கர்மண:
நிர்விக்னேன பரிஸமாப்த்
யர்த்தம் ஆதௌ விக்னே
ச்’வர பூஜாம் கரிஷ்யே

7. ஆஸன பூஜை

(பூஜை ஆரம்பிக்கும் முன் நாம் அமரும் ஆசனம் / பலகையை சுத்தப்படுத்துவதற்காக, கீழ்க்காணும் மந்திரங்களை சொல்லி தீர்த்தம் தெளித்து பிறகு அமர்ந்து கொள்ளவும்.)

ப்ருத்வி த்வயா த்ருதா லோகா
தேவி த்வம் விஷ்ணுனா த்ருதா
த்வம் ச தாரய மாம் தேவி
பவித்ரம் குரு ச ஆஸனம்

8. ஆத்ம பூஜை

(மனதை ஒருநிலைப்படுத்தி இறைவனை தியானித்து கீழ்காணும் மந்திரங்களைச் சொல்லி தலையில் அக்ஷதையைப் போட்டுக்கொள்ளவும்.)

தேஹோ தேவாலய: ப்ரோக்த:
ஜீவோ தேவ: ஸநாதன:
த்யஜேத் அஜ்ஞான நிர்மால்யம்
ஸோஹம்பாவேன பூஜயேத்

2. ப்ரதான பூஜை

த்யானம்

சு’க்லாம்............ சா’ந்தயே

சு’க்லாம்பரதரம் விஷ்ணும்
ச ’சி’ வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோபசா ’ந்தயே

ப்ராணாயாமம்

ஓம் பூ...... பூர்ப்புவஸ்ஸுவரோம்

ப்ராணாயாமம்

(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கி மனதிற்குள்ளும், மூச்சை மெதுவாக வெளியிடும்போதும் இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாக சொல்லக்கூடாது. படத்தில் உள்ளது போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டியது.)

ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன:,
ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸவிதுர்
வரேண்யம், பர்க்கோதேவஸ்ய
தீமஹி, தியோ யோ ந: ப்ரசோ
தயாத் ஓமாபோ ஜ்யோதீரஸ:,
அம்ருதம் ப்ரஹ்ம பூர்ப்புவஸ்ஸுவரேம்
(மந்திரம் சொல்லி முடித்தவுடன் வலது காதை தொடவும்.)

ஸங்கல்பம்

பிரதான பூஜைக்குரிய ஸங்கல்ப விளக்கம்

(நாம் எந்த ஸ்வாமியைக் குறித்து பூஜை செய்கிறோமோ மற்றும் நாம் எந்த நோக்கத்துடன் இப்பூஜையை எடுத்துக் கொள்கிறோமோ அதனை மனதில் வைத்துக் கொண்டு, இந்த ஸங்கல்பத்தின் மந்திரங்களை சொல்லி, அதன்படி செய்யவேண்டும். ஸகங்கல்பம் செய்வதனால் இப்பூஜை மூலம் நாம் உறுதிகளைக் கூறி அதை பின்பற்றி வரவேண்டும்.)

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீபரமேச்’வர ப்ரீத்யர்த்தம் சு’பே சோ’பனே முஹூர்த்தே, ஆத்ய ப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே, ஸ்ரீ ச்’ வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வன்தரே, அஷ்டாவிம்ச ’தி தமே, கலியுகமே, ப்ரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரத வர்ஷே, பரதக் கண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்’வே, ச ’காப்தே, அஸ்மின் வர்த்தமானே, வ்யாவ ஹாரிகே, ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே,

.... நாம ஸம்வத்ஸரே (வருஷத்தின் பெயர்)

தமிழ் வருஷங்கள் 60

1. பிரபவ
2. விபவ
3. சுக்கில
4. பிமோதூத
5. பிரஜோத்பத்தி
6. ஆங்கிரஸ
7. ஸ்ரீமுக
8. பவ
9. யுவ
10. தாது
11. ஈஸ்வர
12. வெகுதான்ய
13. பிரமாதி
14. விக்கிரம
15. விஷு
16. சித்ரபானு
17. சுபானு
18. தாரண
19. பார்த்திப
20. விய
21. சர்வஜித்து
22. சர்வதாரி
23. விரோதி
24. விக்ருதி
25. கர
26. நந்தன
27. விஜய
28. மன்மத
30. துர்முகி
31. ஏவிளம்பி
32. விளம்பி
33. விகாரி
34. சார்வரி
35. பிலவ
36  சுபகிருது
37. சோபகிருது
38. குரோதி
39. விசுவாவசு
40. பராபவ
41. பிலவங்க
42. கீலக
43. சௌமிய
44. சாதாரண
45. விரோதிகிருது
46. பரிதாபி
47. பிரமாதீச
48. ஆனந்த
49. ராக்ஷஸ
50. நள
51. பிங்கள
52. காளயுக்தி
53. சித்தார்த்தி
54. ரௌத்திரி
55. துன்மதி
56. துந்துபி
57. ருத்ரோக்காரி
58. ரக்தாக்ஷி
59. குரோதன
60. அக்ஷய

..... அயனே (உத்தராயணே   தை முதல் ஆனி வரை, தக்ஷிணாயனே  ஆடி முதல் மார்கழி வரை)

......ருதௌ

ஒரு வருஷத்துக்கு ருதுக்கள் 6

தமிழ் மாதங்கள்         ருதுக்கள்

1. சித்திரையும், வைகாசியும்  : வஸந்த ருது
2. ஆனியும், ஆடியும் : க்ரீஷ்ம ருது
3. ஆவணியும், புரட்டாசியும் : வர்ஷ ருது
4. ஐப்பசியும், கார்த்திகையும் : ச ’ரத் ருது
5. மார்கழியும், தையும் : ஹேமந்த ருது
6. மாசியும், பங்குனியும் : சி ’ சி’ர ருது

....... மாஸே

தமிழ் மாதங்களுக்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

தமிழ் மாதங்கள்         ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. சித்திரை    1. மேஷம்
2. வைகாசி    2. ரிஷபம்
3. ஆனி    3. மிதுனம்
4. ஆடி     4. கடகம்
5. ஆவணி     5. சிம்மம்
6. புரட்டாசி    6. கன்னி
7. ஐப்பசி     7. துலாம்
8. கார்த்திகை    8. விருச்’சிகம்
9. மார்கழி     9. தனுஸு
10. தை    10. மகரம்
11. மாசி     11. கும்பம்
12. பங்குனி    12. மீனம்

ஒரு மாதத்துக்கு இரண்டு பக்ஷங்கள்:

அ, சுக்ல பக்ஷம்: அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் பவுர்ணமி திதி வரையில் சுக்ல பக்ஷம்.

ஆ. க்ருஷ்ண பக்ஷம்: பவுர்ணமி திதிக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரையில் கிருஷ்ண பக்ஷம்.

திதிகள்: 15

1. பிரதமை
2. துவிதியை
3. திருதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. சஷ்டி
7. சப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. திரயோதசி
14. சதுர்த்தசி
15. பவுர்ணமி அல்லது அமாவாசை

..........பக்ஷே (அமாவாசைக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் பவுர்ணமி திதி வரையில் சுக்ல பக்ஷம், பவுர்ணமி திதிக்கு அடுத்த நாள் பிரதமை திதி முதல் அமாவாசை திதி வரையில் க்ருஷ்ண பக்ஷம்).

.......சு’ப்திதௌ

திதிகள் : 15

1. பிரதமை
2. துவிதியை
3. திருதியை
4. சதுர்த்தி
5. பஞ்சமி
6. சஷ்டி
7. சப்தமி
8. அஷ்டமி
9. நவமி
10. தசமி
11. ஏகாதசி
12. துவாதசி
13. திரயோதசி
14. சதுர்த்தசி
15. பவுர்ணமி அல்லது அமாவாசை

.........வாஸர யுக்தாயாம்

தமிழ் வார நாட்கள் 7 க்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

தமிழ்நாட்கள்        ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. ஞாயிற்றுக்கிழமை    : பானுவாஸரம்
2. திங்கட்கிழமை    : இந்துவாஸரம்
3. செவ்வாய்க்கிழமை    : பௌமவாஸரம்
4. புதன்கிழமை        : ஸௌம்யவாஸரம்
5. வியாழக்கிழமை    : குருவாஸரம்
6. வெள்ளிக்கிழமை    : பிருகுவாஸரம்
7. சனிக்கிழமை        : ஸ்திரவாஸரம்

........நக்ஷத்ர யுக்தாயாம்

நக்ஷத்திரங்கள் 27 க்கு ஸம்ஸ்க்ருத பெயர்கள்

நக்ஷத்திர பெயர்கள்    ஸம்ஸ்க்ருத பெயர்கள்

1. அஸ்வினி         அஸ்வினீ
2. பரணி        அபபரணி
3. கார்த்திகை         க்ருத்திகா
4. ரோகிணி         ரோஹிணி
5. மிருகசீர்ஷம்         ம்ருகசீர்ஷ
6. திருவாதிரை / ஆருத்ரா      ஆர்த்ரா
7. புனர்பூசம்         புனர்வஸு
8. பூசம்         புஷ்ய
9. ஆயில்யம்         ஆஸ்லேஷா
10. மகம்         மக
11. பூரம்         பூர்வ பல்குனி
12. உத்திரம்         உத்தர பல்குனி
13. அஸ்தம்         ஹஸ்த

சு’பயோக சு’பகரண ஏவங்குண விசே ’ஷண விசி ’ஷ்டாயாம் அஸ்யாம் சு’பதிதௌ,

இதுவரையில் ஸங்கல்பத்தில் பூஜைசெய்யும் தினத்தின் விஷயங்களை பார்த்தோம். இனி பூஜைசெய்யும் நபரின் விவரங்களை கூறவேண்டும்.

..... கோத்ரோத்பவஸ்ய (பூஜைசெய்யும் யஜமானனின் கோத்திரத்தின் பெயர்),... நக்ஷத்ரயுக்தாயாம் (பூஜைசெய்யும் யஜமானனின் நக்ஷத்திரம்),... ராசௌ ’ (பூஜைசெய்யும் யஜமானனின் நக்ஷத்திரத்திற் குண்டான ராசி) ஜாதஸ்ய, .... (பூஜைசெய்யும் யஜமானனின் பெயர்)

நாமதேயஸ்ய

அடுத்து என்ன பலன்களுக்காக பூஜை செய்கிறோம் என்பதைக் கூறி, எந்த ஸ்வாமியை பூஜையை செய்கிறோம் என்பதனைக்கூறி ஸங்கல்பத்தை முடிக்க வேண்டும். உதாரணம்:

* ஸத் ஸந்தான ப்ராப்த்யர்த்தம் (நற்குழந்தை பேறு உண்டாக)
* ஸகல ரோக நிவ்ருத்யர்த்தம் (எல்லா வியாதியும் தீர)
* ராஜத்வாரே ஸர்வானுகூல்ய ஸித்யர்த்தம் (அரசாங்கத்தில் எல்லா நன்மைகளையும் பெற)
* சீ’ க்ரமேவ விவாஹ ஸித்யர்த்தம் (விரைவில் திருமணமாக)
* வ்யவஹாரஜயாவாப்த்யர்த்தம் (காரிய ஜயம் ஏற்பட)
* அபம்ருத்யு தோஷ நிவாரணார்த்தம் (அகால மரணம் நீங்க)
* தனதான்ய ஸம்ருத்யர்த்தம் (தன, தான்யங்கள் விருத்தியடைய)
ஸ்ரீ............(எந்த ஸ்வாமியை பூஜை செய்கிறோமோ அந்த ஸ்வாமியின் பெயர்) பூஜாம் கரிஷ்யே.

(இது போன்ற உங்களுக்கு வேண்டிய ஸங்கல்பங்களைக் செய்துக் கொண்டு பூஜைகளை செய்யலம்.)

திதி மற்றும் நக்ஷத்திரங்களை நீங்கள் உபயோகப்படுத்தும் பஞ்சாங்கத்தைப் பார்த்துத் தெரிந்துவைத்துக்கொள்ளவும்.

மமோபாத்த, ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா, ஸ்ரீ பரமேச்’வர ப்ரீத்யர்த்தம், சு’பே, சோ’பனே, முஹுர்த்தே, ஆத்ய ப்ரஹ்மண:, த்விதீய பரார்த்தே, ச்’வேதவராஹ கல்பே, வைவஸ்வத மன்வந்தரே, அஷ்டாவிம்ச ’திதமே, கலியுகே, ப்ரதமே பாதே, ஜம்பூத்வீபே, பாரதவர்ஷே, பரதகண்டே, மேரோ; தக்ஷிண பார்ச்’வே, ச ’காப்தே அஸ்மின் வர்த்தமானே, வ்யாவஹாரிகே, ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே, *........நாம ஸம்வத்ஸரே, *....அயனே, *....ருதௌ, *.......மாஸே, *.....பக்ஷே, *.....சு’பதிதௌ, *.........வாஸரயுக்தாயாம், *......நக்ஷத்ரயுக்தாயாம், *...சு’பயோக சு’பகரண ஸகல விசே ’ஷண விசி’ஷ்டாயாம், அஸ்யாம் சு’பதிதௌ,

அஸ்மாகம் ஸஹ குடும்பாநாம் க்ஷேமஸ்தைர்ய, வீர்ய, விஜய, ஆயுராரோக்ய, ஐச்’வர்யாபி வ்ருத்யர்த்தம், அசஞ்சல நிஷ்கபட பக்தி ஸித்யர்த்தம், ஸபரிவார ஸாம்ப பரமேச் ’வர ப்ரீத்யர்த்தம், யாவத் ச ’க்திம், த்யான ஆவாஹனாதி ஷோடசோ ’ பசாரை: பஞ்சாயதன பூஜாம் கரிஷ்யே ததங்கம் கலசபூஜாம் ச கரிஷ்யே (அக்ஷதையை வடக்குபுறம் கீழே போட்டு கை அலம்பவும்)

கண்டா பூஜை

(பூஜை செய்யும் இடத்தில் நற்தேவதைகளின் வரவுக்காகவும், தீயசக்திகள் விலகவும், கீழ்காணும் மந்திரங்களைச் சொல்லி, மணிக்கு சந்தனம், குங்குமம் இட்டு, மணியடிக்கவும்.

ஆகமார்த்தம் து தேவானாம்
கமநார்த்தம் து ரக்ஷஸாம்
கண்டாரவம் கரோம்யாதௌ
தேவதாஹ்வான லாஞ்ச்சனம்

10. கலச ’ பூஜை

இந்த மந்திரம் தன்னையும், தன்னை சுற்றியுள்ள பூஜா திரவியங்களையும் சுத்தம் செய்வதற்காக சொல்லப்படுவதாகும்.

பஞ்சாபத்திரத்திற்கு (தீர்த்தபாத்திரம்) நான்கு புறங்களிலும் கீழ்வரும் மந்திரத்தை சொல்லி சந்தனம் இடவும்.

கலேச திவ்ய பரிமள கந்தான் தாரயாமி

கீழ்வரும் மந்திரத்தை சொல்லி குங்குமம் இடவும் கந்தஸ்யோபரி ஹரித்ராகுங்குமம் தாரயாமி

பிறகு அந்த (தண்ணீர் நிரப்பிய) தீர்த்தபாத்திரத்தில் ஆய்ந்தெடுத்த துளஸி அல்லது புஷ்பத்தை கீழ்வரும் மந்திரத்தைக் கூறி போடவும்.

ஓம் கங்காயை நம:
ஓம் யமுனாயை நம:
ஓம் கோதாவர்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஓம் நர்மதாயை நம:
ஓம் ஸிந்தவே நம:
ஓம் காவேர்யை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஸப்தகோடி மஹாதீர்த்தானி ஆவாஹயாமி

பிறகு தீர்த்த பாத்திரத்தை வலது கையால் மூடிக் கொண்டு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லவும்.

கலச ’ ச்’ லோகம்

கலச ’ஸ்ய முகே விஷ்ணு:
கண்டே ருத்ர: ஸமாச்’ரித:
மூலே தத்ர ஸ்திதோ ப்ரஹ்மா
மத்யே மாத்ருகணா: ஸ்ம்ருதா:

குக்ஷௌ து ஸாகரா: ஸர்வே
ஸப்தத்வீபா வஸுந்தரா
ருக்வேதோ (அ)த யஜுர்வேத:
ஸாமவேதோ (அ) ப்யதர்வண:

அங்கைச் ’ச ஸஹிதா: ஸர்வே
கலசா ’ம்பு ஸமாச்’ரிதா:
ஆயாந்து தேவபூஜார்த்தம்
துரிதக்ஷயகாரகா:

கங்கே ச யமுனே சைவ
கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி
ஜலே (அ) ஸ்மின் ஸந்நிதம் குரு
ஓம் பூர்புவஸ்ஸுவ: (3 முறை)

என்று ஜபித்து, கலச ’த் தீர்த்தத்தை சிறிதளவு எடுத்து பூஜா திரவ்யங்களையும், ஸ்வாமியையும் ப்ரோக்ஷித்து, தன்னையும் ப்ரோக்ஷித்து கொள்ளவும்.

ச ’ங்க பூஜா

கலச தீர்த்தத்தினால் சங்கத்தை (சந்தனம் இட்டபின்) நிரப்பவும். (சங்கம் இல்லாத இடத்தில் இது தேவையில்லை.)

த்வம் புரா ஸாகரோத்பன்னோ விஷ்ணுனா வித்ருத: கரே
தேவைச்’ச பூஜித: ஸர்வை: பாஞ்சஜன்ய நமோஸ்து தே

ச ’ங்கம் சந்த்ரார்க தைவத்யம் குக்ஷௌ வருண தைவதம்
ப்ருஷ்டே ப்ரஜாபதிச்’சைவ அக்ரே கங்கா ஸரஸ்வதி
த்ரைலோக்யே யானி தீர்த்தானி மஹா தேவஸ்ய சாக்ஞயா
ஆயாந்தி தாநி ச’ங்கேது தஸ்மாத் ச’ங்கம் ப்ரபூஜயே

சங்க தீர்த்தத்தால் பூஜா திரவியங்களையும் தன்னையும் மூன்று தடவை புரோக்ஷித்துக் கொண்டு, மறுபடியும் காயத்ரியை சொல்லி சங்கத்தை தீர்த்தத்தால் நிரப்பவும்.

ஆத்ம பூஜா

தேஹோ தேவாலய: ப்ரோக்தோ ஜீவோ தேவ: ஸநாதன:/ த்யஜே  தஜ்ஞான நிர்மால்யம் ஸோஹம் பாவனே பூஜயேக்// (அக்ஷதையை தன் மீது போட்டுக் கொள்ளவும்)

பீட பூஜா

(ஐந்து தேவதைகளை வைத்துள்ள தாம்பாளம்/கோலம் ஆகியவற்றின் மீது புஷ்ப அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்.)

ஓம் ஸகல  குணாத்ம  ச ’க்தியுக்தாய யோக பீடாத்மனே நம:
ஆதாரச’க்த்யை நம:/மூலப்ரக்ருத்யை நம:/
ஆதிவராஹாய நம:/ ஆதி கூர்மாய நம:/ அனந்தாய நம:/
ப்ருதிவ்யை நம:/ ஆதித்யாதி நவக்ரஹ தேவதாப்யோ நம:/
தச ’திக்பாலேப்யோ நம:/

த்யானம்

கணானாம் த்வா கணபதிகும் ஹவாமஹே
கவீம் கவீனாமுபமச்’ரவஸ்தமம்/
ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பதே
ஆன: ச்’ருண்வன்னூதிபி: ஸீத ஸாதனம்//
மஹா கணபதிம் த்யாயாமி / ஆவாஹயாமி//
(புஷ்பம் அக்ஷதைகளை கணபதியிடம் ஸமர்ப்பிக்கவும்)

ஆஸத்யேன  ரஜஸா வர்த்தமானோ
நிவேச ’யன்னம்ருதம் மர்த்யஞ்ச/
ஹிரண்யயேன ஸவிதாரதேனா
தேவோயாதி புவனா விபச்’யன்//
ச்சாயா தேவீ ஸமேத ஸூர்ய நாராயணம்
த்யாயாமி/ ஆவாஹயாமி/
(புஷ்பம் அக்ஷதைகளை சூர்யனிடம் ஸமர்ப்பிக்கவும்)

ஸஹஸ்ர  சீ’ர்ஷா புருஷ:/
ஸஹஸ்ராக்ஷ: ஸஹஸ்ரபாத்/
ஸ பூமிம் விச்’வதோ, வ்ருத்வா/
அத்யதிஷ்ட்டத்தசா’ங்குலம்//
பூமி நீளா ஸமேத ஸ்ரீமஹாவிஷ்ணும்
த்யாயாமி/ ஆவாஹயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை விஷ்ணுவிடம் ஸமர்ப்பிக்கவும்)

கௌரீ மிமாய ஸலிலானி
தக்ஷத்யேகபதீ த்விபதீ ஸர சதுஷ்பதீ/
அஷ்டாபதீ நவபதீ பபூவுஷீ
ஸஹஸ்ராக்ஷரா பரமே வ்யோமன்//
கௌரீம் த்யாயாமி /ஆவாஹயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை தேவியிடம் ஸமர்ப்பிக்கவும்)

த்ரியம்பகம் யஜாமஹே
ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம்/
உர்வாருகமிவ பந்தனான்
ம்ருத்யோர்  முக்ஷீய மாம்ருதாத்/
ஸ்ரீ சாம்ப பரமேச்’ரம் த்யாயாமி/ ஆவாஹயாமி
(புஷ்பம் அக்ஷதைகளை பரமேச்’வரரிடம் ஸமர்ப்பிக்கவும்)

ஆஸனாத்யுபசாரா:
(ஆஸனம் முதலிய உபசாரங்கள்)

ஆவாஹிதாப்ய: ஸர்வாப்யோ தேவதாப்யோ நம:
ஆஸனம் ஸமர்ப்பயாமி
(ஆஸனத்திர்க்கு புஷ்பம் ஸமர்ப்பிக்கவும்)

பாத்யம் ஸமர்ப்பயாமி
(தீர்த்தம் ஸமர்ப்பிக்கவும்)

அர்க்யம் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்துடன் தீர்த்தம் ஸமர்ப்பிக்கவும்)

ஆசமனீயம் ஸமர்ப்பயாமி
(தீர்த்தம் ஸமர்ப்பிக்கவும்)

ஸ்நானம் ஸமர்ப்பயாமி
(அபிஷேகம் செய்விக்கவும்.)

அம்பிகைக்கும், விஷ்ணுவுக்கும், ஆதித்யனுக்கும், கணபதிக்கும் அவரவர்களுக்குரிய மந்திரங்களாலும், பரமசிவனை கூடியவரை ருத்ரப்ரச்’னம், புருஷஸூக்தம் முதலியவற்றாலும் உபசரிக்க வேண்டும். மற்றும் பஞ்சாம்ருதம், பால், தயிர் இளநீர், ஏலம் கலந்த தீர்த்தம் முதலியவற்றால் அபிஷேகம் செய்வித்து, ஆசனமளித்து, உலர்ந்த துணியால் துடைத்து, வஸ்திரங்களை அணிவித்து ஆஸனத்தில் ஸ்தாபிக்கவும் (பசும்பால் அவசியமானது.)

கந்தான் தாரயாமி
(சந்தனமிடவும்)

குங்குமம் ஸமர்ப்பயாமி
(குங்குமிடவும்)

உபவீதம் ஸமர்ப்பயாமி
(பூணூல் அணிவிக்கவும்)

ஆபரணம் ஸமர்ப்பயாமி
(ஆபரணங்கள் அணிவிக்கவும்.)

அர்ச்சனை
(புஷ்பத்தால் அர்ச்சிக்கவும்.)

விநாயகர்

ஓம் ஸுமுகாய        நம:
ஓம் ஏகதந்தாய        நம:
ஓம் கபிலாய        நம:
ஓம் கஜ கர்ணகாய    நம:
ஓம் லம்போதராய    நம:
ஓம் விகடாய        நம:
ஓம் விக்ன ராஜாய    நம:
ஓம் விநாயகாய        நம:
ஓம் தூமகேதவே        நம:

ஸூர்யன்

ஓம் மித்ராய        நம:
ஓம் ரவயே        நம:
ஓம் ஸூர்யாய        நம:
ஓம் பானவே        நம:
ஓம் ககாய        நம:
ஓம் பூஷ்ணே         நம:

விஷ்ணு

ஓம் அச்யுதாய        நம:
ஓம் அனந்தாய        நம:
ஓம் கோவிந்தாய        நம:
ஓம் கேச ’வாய        நம:
ஓம் நாராயணாய    நம:
ஓம் மாதவாய        நம:
ஓம் புருஷோத்தமாய    நம:
ஓம் விஷ்ணவே        நம:

ஓம் கணாத்யக்ஷாய    நம:
ஓம் பாலசந்த்ராய    நம:
ஓம் கஜானனாய        நம:
ஓம் வக்ரதுண்டாய    நம:
ஓம் சூ’ர்ப்பகர்ணாய    நம:
ஓம் ஹேரம்பாய        நம:
ஓம் ஸ்கந்தபூர்வஜாய    நம:
ஓம் ஸித்திவிநாயகாய    நம:

ஓம் ஹிரண்யகர்ப்பாய    நம:
ஓம் மரீசயே        நம:
ஓம் ஆதித்யாய        நம:
ஓம் ஸவித்ரே        நம:
ஓம் அர்க்காய        நம:
ஓம் பாஸ்கராய        நம:

ஓம் மதுஸூதனாய    நம:
ஓம் த்ரிவிக்ரமாய    நம:
ஓம் வாமனாய        நம:
ஓம் ஸ்ரீதராய        நம:
ஓம் ஹ்ருஷீகேசா’ய    நம:
ஓம் பத்மநாபாய        நம:
ஓம் தாமோதராய    நம:

சிவன்

ஓம் பவாய தேவாய    நம:
ஓம் ச’ர்வாய தேவாய    நம:
ஓம் ஈசானாய தேவாய    நம:
ஓம் பசு’பதேர் தேவாய    நம:
ஓம் ருத்ராய தேவாய    நம:
ஓம் உக்ராய தேவாய    நம:
ஓம் பீமாய தேவாய    நம:
ஓம் மஹேதே தேவாய    நம:

அம்பிகை

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்

ஓம் ஸ்ரீமாத்ரே            நம:
ஓம் ஸ்ரீமஹா ராக்ஜ்ஞ்ன்யை        நம:
ஓம் ஸ்ரீமத் ஸிம்ஹா ஸனேச்’வர்யை    நம:
ஓம் நிர்மமாயை            நம:
ஓம் மமதாஹந்த்ரியை        நம:
ஓம் நிஷ்பாபாயை        நம:
ஓம் பாபநாசி’ன்யை        நம:
ஓம் நிஷ்க்ரோதாயை        நம:
ஓம் க்ரோத ச’மன்யை        நம:
ஓம் நிர்லோபாயை        நம:
ஓம் லோபநாசி’ன்யை        நம:
ஓம் நி:ஸம்ச’யாயை        நம:
ஓம் ஸம்ச’யக்ன்யை        நம:
ஓம் நிர்ப்பவாயை        நம:
ஓம் பவநாசி’ன்யை        நம:
ஓம் நிர்விகல்பாயை        நம:
ஓம் நிராபாதாயை        நம:
ஓம் பேதநாசி’ன்யை        நம:
ஓம் நிர்பேதாயை        நம:
ஓம் நிர்நாசா’யை            நம:
ஓம் ம்ருத்யுமதன்யை        நம:
ஓம் நிஷ்க்ரியாயை        நம:
ஓம் நிஷபரிக்ரஹாயை        நம:
ஓம் நிஸ்துலாயை        நம:
ஓம் நீலசிகுராயை        நம:
ஓம் நிரபாயாயை        நம:
ஓம் நிரத்யாயை            நம:
ஓம் துர்லபாயை            நம:
ஓம் துர்காயை            நம:
ஓம் துர்கமாயை            நம:
ஓம் து:க்க ஹந்த்ர்யை        நம:
ஓம் ஸுகப்ரதாயை        நம:
ஓம் துஷ்டதூராயை        நம:
ஓம் துராசாரச ’மன்யை        நம:
ஓம் தோஷவர்ஜிதாயை        நம:
ஓம் ஸ்ர்வக்ஞ்ஞாயை        நம:
ஓம் ஸாந்த்ரகருணாயை        நம:
ஓம் ஸமானாதிக வர்ஜிதாயை        நம:
ஓம் ஸர்வச’க்திமய்யை        நம:
ஓம் ஸர்வ மங்களாயை        நம:
ஓம் ஸத்கதிப்ரதாயை        நம:
ஓம் ஸர்வேச்’வர்யை        நம:
ஓம் ஸர்வமய்யை        நம:
ஓம் ஸர்வமந்த்ர ஸ்வரூபிண்யை        நம:
ஓம் ஸர்வ யந்த்ராத்மிகாயை        நம:
ஓம் ஸர்வதந்த்ர ரூபாயை        நம:
ஓம் மனோன்மன்யை        நம:
ஓம் மாஹேச்’வர்யை        நம:
ஓம் மஹா தேவ்யை        நம:

யா தேவீ ஸர்வபூதேஷு மாத்ரு ரூபணே ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:

 
மேலும் சம்ப்ரதாய விரத பூஜா விதானம் 30. லகு பஞ்சாயதன பூஜை »
(ஆதித்யன், அம்பிகை, விஷ்ணு, கணநாதர், மஹேஸ்வரன்  ஆகிய பஞ்ச (ஐந்து) ஆயதன  ... மேலும்
 

உத்தராங்க பூஜை நவம்பர் 03,2018

உத்தராங்க பூஜைதூரஸி தூர்வதூர்வந்தம் தூர்வதம் யோஸஸ்மான் தூர்வதி தம்தூர்வயம் வயம் தூர்வமஸ் த்வம் ... மேலும்
 

ராஜோபசாரங்கள் நவம்பர் 03,2018

ச்சத்ர  சாமர  ந்ருத்த  கீத  வாத்ய  ஸமஸ்த ராஜோபசாரார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி(புஷ்பம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar