Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உறைபனியில் வெறும் காலுடன் நடந்து ... 26 ஆயிரம் திருப்பதி லட்டுகள், கள்ள சந்தையில் விற்பனை 26 ஆயிரம் திருப்பதி லட்டுகள், கள்ள ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநாவலுார் நம்பியாரூரன் கோவிலில் அமாவாசையில் கும்பாபிஷேகம் நடத்த முயற்சி
எழுத்தின் அளவு:
திருநாவலுார் நம்பியாரூரன் கோவிலில் அமாவாசையில் கும்பாபிஷேகம் நடத்த முயற்சி

பதிவு செய்த நாள்

05 நவ
2018
11:11

உளுந்துார்பேட்டை:  திரு­நா­வ­லுா­ரில் நம்­பி­யா­ரூ­ரன் கோயி­லில் நவ.,7 அமா­வா­சை­யன்று கும்­பா­பி­ஷேம் நடத்­து­வற்­கான பணி­கள் மும்­மு­ர­மாக நடந்து வரு­வது அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. விழுப்­பு­ரம் மாவட்­டம், உளுந்­துா­ர்­பேட்டை அடுத்த திரு­நா­வ­லுா­ரில் நம்­பி­யா­ரூ­ரன் (சுந்­த­ர­மூர்த்தி நாய­னார்) மடம் உள்­ளது. இது அவர் பிறந்த இடம். உள்­ளூர் அர்ச்­சர்­கள் குடும்­பத்­தி­ன­ரால் பரம்­ப­ரரை பரம்­ப­ரை­யாக தனி­ம­ட­மாக நிர்­வா­கம் செய்­யப்­ப­டு­கிறது. பல ஆண்­டு­கள் பழமை வாய்ந்த இந்த மடம், காலப்­போக்­கில் சிதி­ல­ம­டைந்து, கேட்­பா­ரற்று கிடந்­தது.

சில ஆண்­டு­க­ளுக்கு முன் ‘தம்­பி­ரான் தோழர் அறக்­கட்­டளை’ என்ற பெய­ரில் மடத்தை கோயி­லாக கட்­டித் தரு­கி­றோம் என கேட்­டுக் கொண்­ட­தின் பேரில், பரம்­பரை அறங்­கா­ல­வர்­கள், தம்­பி­ரான் தோழர் அறக்­கட்­ட­ளைக்கு அனு­மதி வழங்­கி­னர். அற­நி­லை­யத்­து­றை­யும் 4.5 லட்­சம் ரூபாய்க்கு திருப்­பணி செய்து கொள்­ள­லாம் என அனு­மதி வழங்­கி­யது. ஆனால் பழைய மடத்தை இடித்து விட்டு கருங்­கல் கோயில் அமைத்து கும்­பா­பி­ஷே­கத்­தற்­கான ஏற்­பா­டு­களை
தம்­பி­ரான் தோழர் அறக்­கட்­ட­ளை­யி­னர் செய்­கின்­ற­னர். நவ.,7 ம் தேதி கும்­பா­பி­ஷே­கம் நடப்­பதை கேள்­விப்­பட்டு உள்­ளூர் குருக்­களும், பரம்­பரை அறங்­கா­வ­லர்­க­ளு­மா­கிய அர்ச்­சர்­கள், ‘நாங்­கள் கும்­பா­பி­ஷே­கம் செய்­கி­றோம்,’ என கேட்ட போது, அவர்­கள் மறுத்து தமிழ் முறைப்­படி கும்­பா­பி­ஷே­கம் செய்­வ­தாக அறி­வித்­துள்­ள­னர்.

சுந்­த­ரர் கோயி­லில் ஆகம மர­பு­படி செய்­யா­மல், தமிழ்­மு­றைப்­படி செய்­வது தவறு என அவர்­கள் மறுத்­தி­ருக்­கி­றார்­கள். மேலும் ‘கூடாத நாள்’ என்று ஜோதிட சாஸ்­தி­ரங்­கள் கூறி­யுள்ள அமா­வா­சை­யன்று கும்­பா­பி­ஷே­கம் செய்­வ­தாக அறி­வித்­துள்­ள­னர். இந்­நி­லை­யில் அனைத்து இந்­திய ஆதி­சைவ சிவாச்­சா­ரி­யார்­கள் சேவா சங்­கம் நீதி­மன்­றத்­தில் தடை­யாணை பெற முயற்­சித்­தது. ஆனால் மடத்­திற்கு கும்­பா­பி­ஷே­கம் செய்­கி­றோம் என அவர்­கள் அனு­மதி பெற்­று­விட்­ட­தால், தடை­யாணை கிடைக்­க­வில்லை. ஒரு மடத்தை கருங்­கல் கோயி­லாக கட்­டி­விட்டு, மடம் என்று பொய் சொல்லி அனு­மதி பெற்­றுள்­ள­னர். இத­னால் சிவாச்­சா­ரிய
சங்­கத்­தி­னர் பாரம் ­ப­ரிய சைவ ஆதீ­னங்­க­ளின் ஆத­ரவை நாடி­யுள்­ள­னர். தரு­மை­யா­தீ­னம், திரு­வா­வ­டு­துறை, திருப்­ப­னந்­தாள் காசி­ம­டம் போன்ற ஆதி­னங்­கள் சுந்­த­ர­மூர்த்தி சுவா­மி­கள் கோயி­லுக்கு தமிழ்­மு­றைப்­ப­படி கும்­பா­பி­ஷே­கம் நடத்த கூடாது என்­றும், அமா­வா­சை­யில் கும்­பா­பி­ஷே­கம் செய்­யக்­கூ­டாது என அதி­ருப்­தியை வெளி­யிட்­டுள்­ளது. மேலும் தை மாதத்­திற்கு பின் நல்ல நாளில் ஆகம மர­புப்­படி செய்ய வேண்­டும், என அறிக்கை வெளி­யிட்­டும் அவ்­வாறு நிகழ்த்­து­மாறு சிவாச்­சா­ரிய சங்­கத்­தி­னரை வலி­யு­றுத்­தி­யுள்­ள­னர்.ஆனால் எதை­யும் பொருட்­ப­டுத்­தா­மல், கும்­பா­பி­ஷே­கம் நடப்­ப­தற்­கான பணி­கள் மும்­மு­ர­மாக நடப்­பது அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நேற்று துவங்கியது.கேரள மாநிலத்தின் ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோயிலில் ரஷ்யாவைச் சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து பித்தளை வேல் காணிக்கையாக ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வரதராஜப் பெருமாள் கோயிலில் உலக நன்மைக்காக பவித்திர பூஜையில் ஏராளமானோர் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் கார்த்திகை மாத பிரதோஷம், அமாவாசை ... மேலும்
 
temple news
அழகர்கோவில்; கள்ளழகர் கோயிலில் நேற்று உண்டியல் திறப்பு நடந்தது. இணை கமிஷனர் செல்லதுரை, உதவி கமிஷனர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar