பதிவு செய்த நாள்
05
நவ
2018
12:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா வரும், 14ல் துவங்கி, வரும், 23ல், 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதைக்காண, பல்வேறு பகுதிகளிலிருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர். பாதுகாப்பு பணிகள் குறித்து, நேற்று முன்தினம் இரவு எஸ்.பி., அலுவலகத்தில், டி.ஜி.பி., ராஜேந்திரன் ஆய்வு நடத்தினார். இதில், எஸ்.பி., சிபிசக் கரவர்த்தி, வடக்கு மண்டல ஐ.ஜி., நாகராஜ், வேலூர் சரக டி.ஐ.ஜி., வனிதா உள்ளிட்டோர் பலர் உடனிருந்தனர். ஆய்வு கூட்டத்தில், கோவில் வளாகம், தற்காலிக பஸ் ஸ்டாண்ட், கிரிவலப்பாதை, மக்கள் அதிகமாக கூடும் இடம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணி குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்காணிக்கப்பட வேண்டிய பகுதிகள், போக்குவரத்து மாற்றங்கள், அவசர கால மீட்பு பணிகள், கமாண்டோ படை வீரர்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்தும், ஆலோசனை நடத்தப்பட்டது.