பதிவு செய்த நாள்
06
நவ
2018
02:11
திருத்தணி: தீபாவளி மறுநாள் அமாவாசை நோன்பு வருவதால், வீட்டில் பூஜை செய்வதற்காக, மஞ்சள் கயிறு வாங்குவதில், பெண்கள் ஆர்வத்தில் ஈடுபட்டுள்ளனர்.தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. நாளை, அமாவாசை மற்றும் நோன்பு என்பதால், பெரும்பாலான வீடுகளில் அதிரஷ்ம், வாழைப்பழம் போன்றவை படைத்து வழிபடுவர்.இந்த நோன்பின் போது, படையலுடன் மஞ்சள் கயிறு, சாதாரண வளையல், மரத்தால் செய்யப்பட்ட கட்டைசீப்பு, கருப்பு வளையல், மஞ்சள், குங்குமம் வைத்து வீடுகளில் பெண்கள் வழிபடுவர்.பின், பூஜை செய்த கயிறுகளை கையில் கட்டிய பிறகு பெண்கள் விரதத்தை முடித்து, மதிய உணவு சாப்பிடுவர். நோன்பு கயிறு, திருத்தணி ம.பொ.சி. சாலை காந்தி சிலை அருகில், 10க்கும் மேற்பட்ட கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கயிறு, 2 ரூபாய் முதல், ரக வாரியாக, 5 ரூபாய் வரை விற்கப்படுகிறது. திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்கள் நோன்பு கயிறு வாங்குவதற்கு, நேற்று முதல் ஆர்வம் காட்டி வருகின்றனர்.