பதிவு செய்த நாள்
08
நவ
2018
11:11
துாத்துக்குடி: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா, இன்று, யாகசாலை பூஜையுடன் துவங்கியது. துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துாரில், கடலருகே அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில், முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது. லட்சக்கணக்கில் பக்தர்கள் ஆண்டுதோறும் இக்கோவிலில் நடக்கும் முக்கிய விழாக்களில், கந்த சஷ்டி திருவிழா, மிகவும் பிரசித்தி பெற்றது.
பல்வேறு பகுதியில் இருந்தும், லட்சக்கணக்கான பக்தர்கள், இத்திருவிழாவில் கலந்துகொள்வது வழக்கம். கந்த சஷ்டி திருவிழா, இன்று காலை, 7:30 மணிக்கு யாகசாலை பூஜை பூஜையுடன் துவங்கியது. காலை, 10:30 மணிக்கு தீபாராதனை நடந்தது. அதை தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. விழாவின் பிரதான நிகழ்ச்சியான, சூரசம்ஹாரம், 13ம் தேதி மாலை, 4:30 மணிக்கு கடற்கரையில் நடக்கிறது. இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர் என, எதிர்பார்க்கப்படுகிறது. பிரமாண்ட லைட் வசதி வெளிநாடு மற்றும் வெளியூர்களிலிருந்து வரும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் உள்ள தற்காலிக செட்டுகளில் விரதம் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கோவில் வளாகத்தில் பிரத்ேயக ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. கந்த சஷ்டி விழாவை யொட்டி கோவில் வளாகம் விழாக்கோலம் பூண்டு உள்ளது. இதற்காக பிரமாண்ட, லைட் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.