விழுப்புரம் : விழுப்புரம் ரங்கநாதன்ரோடு சித்திவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. கும்பாபிஷேக விழா கடந்த 9ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. நேற்று காலை 8 மணிக்கு அக்னி சஸ்கிருகனம், தீத்த சங்கிரருகனம், கோபுர கலச ஸ்தாபிதம், கன்னியாபூஜை நடந்தது. மாலை 3 மணிக்கு முதல் கால யாக பூஜையும், தீபாராதனையும் நடந்தது. இன்று இரண்டாம் கால யாக பூஜையும், திரவிய ஹோமம், தீபாராதனையும், மாலை மூன்றாம் கால யாக பூஜையும் நடக்கிறது. நாளை (12ம் தேதி) காலை 8 மணிக்கு நான்காம் கால யாக பூஜையும், தத்துவார்ச்சனை மற்றும் தீபாராதனை நடக்கிறது. காலை 8 மணி முதல் 9.30 மணிக்குள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து காலை 10 மணிக்கு அன்னதானமும், மாலை 6 மணிக்கு வீதியுலாவும் நடக்கிறது.