Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிரதான பூஜைக்குரிய ஸங்கல்பம்
முதல் பக்கம் » சம்ப்ரதாய விரத பூஜா விதானம் » 32. சத்யநாராயண பூஜை
சத்யநாராயண பூஜை மஹிமை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 நவ
2018
17:51

முதல் அத்தியாயம்

ஒரு சமயம் நைமிசாரண்யத்தில் சவுனகாதி முனிவர்கள் ஸூதபௌராணிகரை, “விரும்பும் பலத்தை  வரத்தாலும் தவத்தாலும் எவ்வாறு விரைவில் பெற முடியும்”? என்று கேட்டனர். ஸூதரும் பகவான் நாரதருக்குக் கூறியதைச் சொல்லுவதாகச் கூறிச் சொல்ல ஆரம்பித்தார். நாரதர் பிறருக்கு அருள் புரிய பூவுலகம் சென்றார். அங்குத் துன்புற்ற மக்களைக் கண்டார். “இவர்களது துன்பத்தைப் போக்கும் வழி என்ன?” என்று அறிவதற்காக விஷ்ணு லோகம் சென்று பகவானை வேண்டினார். மஹாவிஷ்ணுவும் நாரதரிடம். “நாரதா, கேள் ஏதேனும் ஒரு தினத்தில் சுற்றம் சூழ அந்தணர்களுடன் ஸத்ய நாராயண விரதத்தைச் செய்யலாம். பக்தியுடன் நைவேத்யங்களை ஸமர்ப்பிக்க வேண்டும். வாழைப்பழம், கோதுமை மாவு அல்லது அரிசி மாவு, நெய், பால், சர்க்கரை, பக்ஷணவர்க்கங்கள் எல்லாம் நைவேத்யம் செய்ய வேண்டும். அந்தணரிடம் இந்த விரத மகிமையைக் கேட்டு தக்ஷிணை அளித்து எல்லோருக்கும் உணவு அளித்து வீடு திரும்ப வேண்டும். இது கலியுகத்தில் கண்கூடாகப் பயனளிக்க வல்லதாம் ” என்று கூறினார்.

இரண்டாவது அத்தியாயம்

ஸூதர் கூறுகிறார். அழகிய காசி நாட்டில் ஏழை அந்தணன் ஒருவன் பசி தாகத்தால் அலைந்து கொண்டு இருந்தான். பகவான் அவனிடம் அன்பு கொண்டு ஒரு கிழவன் போல் வேடம் பூண்டு அவனிடம் பரிவுடன், “நீ ஏன் மிகவும் துன்புற்று அலைந்து திரிகிறாய்? என்று கேட்டார். “பிக்ஷை பெறுவதற்கு என்று சொல்லி கிழவரே அதற்கு வழி காட்ட வேண்டும் என்று வேண்டினான். அவரும் அவனை ஸத்ய நாராயண விரதம் செய்யும்படிக் கூறி அதன் முறையையும் உபதேசித்து மறைந்தார். அந்தணனும் அதைச் செய்வதாக உறுதி பூண்டு பிக்ஷைக்காக நகருக்குச் சென்றபோது மிக அதிகமான பொருள் பெற்றான். அதைக் கொண்டு உற்றார் உறவினருடன் ஸத்ய நாராயண பூஜையை நன்றாகச் செய்தான். அவன் துன்பம் நீங்கியது செல்வந்தன் ஆனான். பின்னர் இதை விடாது செய்து இறுதியில முக்தியும் பெற்றான்.

அந்தணன் இந்தப் பூஜையைச் செய்து வரும் காலத்தில், ஒரு நாள் விறகு வெட்டி ஒருவன், தெருத் தெருவாய் விறகு விற்றுக்கொண்டு வந்தான். தன்னையும் மறந்து, அங்கிருந்த பக்தர்களுடன் பூஜையில் ஈடுபட்டான். பூஜையில் பகவானுக்கு நிவேதனம் செய்யப்பட்ட பிரசாதங்கள், விறகு வெட்டிக்கும் கிடைத்தன. பக்தியுடன் உண்டான். அந்தணரிடம் பூஜை பற்றிய விபரங்கள் தெரிந்து கொண்டு தானும் செய்யப் போவதாகக் கூறினான். மறுநாள் விறகுவிற்கச் சென்றபோது அனைத்தும் விற்று விட்டன. ஸத்ய நாராயண பூஜை பிரசாதம் உண்டதின் பலன் இது என்று மகிழ்ந்தான். அவனும் அப்பூஜை செய்து செல்வன் ஆனான். முக்தி அடைந்தான்.

மூன்றாவது அத்தியாய ஸாரம்

ஸுதர் மேலும் கூறுகிறார். உல்காமுகன் என்ற அரசன் தான தர்மங்கள் செய்து அந்தணர்களை மகிழ்வித்து வந்தான். அவன் மனைவி ஸத்ய நாராயண விரதம் செய்து வந்தாள். அங்கு வணிகன் ஒருவன் வந்து “நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” எனக் கேட்டான். ஸந்தான ஸம்பத்துக்களை விரும்பி ஸத்யநாராயண பூஜை செய்வதாக அரசன் கூறினான். வணிகனும் தனக்கும் குழந்தை பிறந்தால் இதனைச் செய்வதாக வேண்டிக் கொண்டான். அவனுக்குப் பெண் குழந்தை பிறந்தது. அவன் மனைவி ஸத்ய நாராயண பூஜை செய்யுமாறு சொன்னாள். தங்கள் பெண்ணுக்குத் திருமணம் ஆன பிறகு அதைச் செய்வதாகக் கூறினான். அவளுக்குத் திருமணமும் ஆயிற்று. வணிகன் பூஜையை மறந்தே போனான். ஒரு முறை அவன் தன் மருமகனுடன் வாணிபத்தின் பொருட்டு ரத்நஸார நகரம் சென்றான். பகவான் அவன் வேண்டுதலை நிறைவேற்றாததால், அவன் தவறை அவனுக்கு உணர்த்த எண்ணி, அவனுக்கு சற்றே துன்பம் உண்டாகும்படி செய்தார். வணிகன் வியாபாரத்தை முடித்துக் கொண்டு அரசனைக் காணச் சென்று அங்கு தங்கினான். அன்று திருடன் ஒருவன் அரண்மனையில் திருடிய பொருட்களுடன் காவலர்க்கு அஞ்சி இவர்கள் தங்கிய இடத்திற்கு வந்து, தான் திருடிய பொருட்களை அங்கு வைத்துவிட்டு மறைந்து போனான். அந்த திருடர்களைப் பின்பற்றி வந்த காவலர்கள், அங்கு வந்து இவ்விருவரையும் திருட்டுச் சொத்துடன் பிடித்து, அரசனிடம் ஒப்படைத்தார்கள். அரசன் இவ்விருவரையும் சிறையில் அடைத்தான். வணிகனின் மனைவியும், மகளும் தங்களிடமுள்ள எல்லாப் பொருட்களையும் பறி கொடுத்துவிட்டு, உண்ண உணவின்றித் தவித்தனர். மகள் ஒருநாள் ஒரு பிராம்மணன் வீட்டிற்குச் சென்று. அங்கு நடந்த ஸத்ய நாரயண பூஜையில் கலந்து கொண்டாள். பின்னர் அங்கு கதை கேட்டும், பிரசாதத்தை உண்டும். மகிழ்ச்சியுடன் வீடு திரும்பித் தன் தாயிடம் நடந்ததைத் தெரிவித்தாள். அவளும் மன மகிழ்ச்சியுடன் தன் சக்திக்குக் தகுந்தபடி ஸத்யநாராயண விரதத்தை நடத்தினாள். பகவானும் அரசனது கனவில் தோன்றி, வணிகனையும் அவன் மருமகனையும் விடுவிக்கும்படிக் கட்டளையிட்டார்.

நான்காம் அத்தியாயம்

வணிகன் சான்றோர்க்கு தக்ஷிணை தானம் செய்துவிட்டு, பின் ஓடத்தில் ஏறித் தன் நகருக்குச் சென்றான். சிறிது தொலைவு சென்றதும் ஸத்ய நாராயணர் ஒரு பிரம்மச்சாரி வடிவில் தோன்றி ஓடத்திலிருப்பது என்ன? என்று கேட்டார். அவனும் அந்த ப்ரம்மசாரியிடம் உண்மையை மறைக்க எண்ணி, அதிலிருப்பது இலைகளும், கொடிகளுமே என்று பதில் கூறினான். “அவ்வாறே ஆகுக ” என்று கூறிப் பகவானும் சிறிது தள்ளிச் சென்று நின்றார். ஓடத்தில் கொடியும் இலைகளுமே இருப்பதைக் கண்டு வணிகன் வருந்தினான். அப்போது, அவனது மருமகன், “இது பிரம்மசாரியின் சாபத்தால் நேர்ந்தது. அவரிடமே அடைக்கலம் புகுவோம் ” என்றான். வணிகன் பிரம்மசாரியைக் கண்டு வணங்கி, மன்னிக்கும்படி வேண்டினான். பகவானும் கருணை கொண்டு அவனுக்கு அருள் புரிந்தார். பின்னர் அவன் நகருக்குச் சென்றதும் தன் வீட்டிற்கு ஒரு தூதுவனை அனுப்பினான். அப்பொழுது அவன் மனைவியும் மகளும் ஸத்ய நாராயண பூஜை செய்து கொண்டிருந்தனர். அவர்களை வரவேற்கும் பரபரப்பில் மகள் பகவானின் பிரஸாதத்தை உண்ண மறந்து விட்டாள். அவரின் இந்த தவற்றை அவனுக்கு உணர்த்த எண்ணிய பகவான் மருமகனுடன் ஓடத்தை நீரில் மூழ்கும்படி செய்தார். அங்கு மருமகனைக் காணாமல் அனைவரும் வருந்தினர். மகள் தன் கணவனது பாதரக்ஷையை எடுத்து வைத்துக்கொண்டு தானும் கணவன் போல் நீரில் மூழ்கிவிட எத்தனித்தாள். வணிகன் அச்சமயம் பூஜை செய்ய நேர்ந்து கொண்டான். அச்சமயம்இறைவன் அசரீரியாய்க் கூறினார் “வணிகனே! உன் மகள் பூஜையின் பிரசாதத்தை உண்ண மறந்து விட்டாள். இது பெரும் அபசாரம். இவள் அதை உண்டபின் தன் கணவனைக் காண்பாள்” என்றார். அப்படியே அவள் வீட்டிற்குச் சென்று பிரசாதத்தை உண்டுவிட்டுத் திரும்பியதும் நீருக்குமேல் வந்த ஒடத்தில் பணத்துடன் தன் கணவனைக் கண்டு மகிழ்ந்தாள்.

ஐந்தாவது அத்தியாயம்

துங்கதவஜன் என்னும் அரசன் ஒருமுறை காட்டிற்குச் சென்று, பல துஷ்ட மிருகங்களை வேட்டையாடி விட்டு ஓர் ஆலமரத்தின் அடியில் வந்து தங்கினான். அங்கு ஆயர்குல மக்கள் ஸத்யநாராயண பூஜையை மிக்க பக்தி சிரத்தையுடன் செய்து, பூஜை முடிந்ததும் அரசன் என்பதால் முதலில் அரசனுக்குப் பிரசாதத்தைத் தந்தனர். அரசன் அதை மதிக்கவில்லை. இடையர்கள் தந்ததை புசிப்பதா என்று எண்ணி அதை புசிக்கவில்ல. உதாஸீனம் செய்தான். உடனே அவனுடைய நூறு பிள்ளைகளும் உயிரிழந்தனர். அவனுடைய சொத்தும் அழிந்து போயிற்று. உடனே தான் செய்த தவற்றை உணர்ந்தான். உடனே அந்த ஆலமரத்திற்கு விரைந்து சென்று ஆயர்களுடன் தானும் அப்பூஜையைச் செய்யலானான். ஸத்ய நாராயண சுவாமியின் அருள் பெற்று முன்பு போல் பிள்ளைகளையும் சொத்துக்களையும் பெற்றுச் சுகமாய் வாழ்ந்தான்.

ஸத்யநாராயண பூஜையைச் செய்து சரித்திரத்தையும் சிரவணம் செய்பவன் பகவானின் அருள் பெறுவான். ஏழ்மை விலகும். அநியாயமாய் சிறைத் தண்டனை பெற்றவன் விடுவிக்கப் படுவான். பயம் நீங்கும் விரும்பிய எல்லாம் கிடைக்கும். சந்தேகமில்லை. கலியுகத்தில் விசேஷ பலன்களைத் தர வல்லது இது. இந்தக் கதையைப் படிப்பவரது பாவங்கள் நீங்கும். இந்தப் பூஜை செய்த அந்தணர் மறு பிறப்பில் குசேலராகப் பிறந்து கிருஷ்ணருடைய அருள் பெற்றார். விறகு விற்பவன் குஹப் பெருமானாகப் பிறந்து இராமனது அருளுக்குப் பாத்திரமானான். உல்காமுகன் தசரதனாகப் பிறந்து ரங்கநாதரது திவ்ய கடாக்ஷம் பெற்று முக்தி அடைந்தான். வணிகன் மோரத்வஜனாகப் பிறந்து தன் உடலில் பற்றின்றி, பிராம்மணனுக்குத் தன் சதையை அறுத்துத் தந்து மோக்ஷம் அடைந்தான். துங்கத்வஜன் நான் முகனானான்.

குறிப்பு: இந்த நான்கு அத்தியாய கதைகளிலிருந்தும் ஒரு விசேஷமான உண்மை தெரிவது என்னவென்றால் ஜாதி பேதம் இல்லாமல் யார் வேண்டுமானாலும் இந்த பூஜையை செய்யலாம் என்பதுதான்.

பூஜைக்கேற்ற காலங்கள்

“ஒவ்வொரு மாதத்திலும் வருகின்ற பவுர்ணமியன்று மாலையில் சந்த்ரோதய காலத்தில் ஸத்யநாராயண வ்ரதம் அனுஷ்டிப்பது உசிதம் ” என்கிறது ஸ்காந்தம். இப்பூஜையைப் பவுர்ணமியில் செய்யலாம். அப்படிப் பவுர்ணமியன்று செய்ய இயலாதவர்கள் அமாவாஸை, அஷ்டமி, த்வாதசி, ஞாயிறு, திங்கள், வெள்ளி, வ்யதீபாதம், ஸங்கராந்தி, தீபாவளி, புரட்டாசி மாதச் சனிக்கிழமைகள் மற்றும் அவரவர் ஜாதகத்தில் சந்திரன் அனுகூலமாக இருக்கும்போது இப்பூஜையைச் செய்யலாம்.

பூஜைக்குரிய வழிமுறைகள்

இப்பூஜையைப் பொது ஸ்தலங்களிலோ, அல்லது அவரவர்களுடைய இல்லத்திலோ, செய்யலாம். அப்படிச் செய்யும்பொழுது ஸத்ய நாராயணரின் அனுக்ர ஹத்தைப் பெறுவதற்கு, பந்துமித்ரர்களுடன் மேள தாள முழக்கங்களுடன் சிறந்த உற்சவமாக, அவரவர் வசதிக்கேற்பச் செய்யலாம். புரோஹிதரை வரவழைத்து அல்லது இப்புத்தகத்தை வைத்துத் தாமாகவே செய்யலாம். பூஜை செய்வதற்கு முன்னால் வீட்டைச் சுத்தப்படுத்தி, பூஜைக்குரிய இடத்தை சுத்தம் செய்து கோலமிட்டு, மேடை அமைத்து மாவிலைத் தோரணம், வாழைமரம் கட்டி அலங்கரிக்க வேண்டும். பூஜைக்கு முன்னதாகவே அதற்குரிய த்ரவ்யங்களைச் சேகரித்து வைத்துக் கொள்வது அவசியமாகும். மேலும், தாய் தந்தையரை நமஸ்கரித்து, குல தெய்வத்தை வேண்டி, தனது  தர்மபத்தி னியுடன் சேர்ந்தே இவ்விரதத்தை அனுஷ்டித்து ஸத்யநாராயணரின் பரிபூரண அருளைப் பெறலாம்.

இந்த பூஜைக்கு வேண்டிய விசேஷ பொருட்கள்

1. 3 கலசங்கள்
2. ஸத்யநாராயண படம்
3. ஸத்யநாராயண யந்த்ரம்
4. கோலமாவு
5. வாழை இலை
6. நூல் (கலசத்தில் சுற்றுவதற்கு)
7. அ) ஒரு கலசத்திற்கு 2 வஸ்த்ரம் வீதம் 3#2=6
ஆ) நவக்ரஹ பூஜைக்கு 9 வர்ண வஸ்த்ரம்
(ஸூர்யன் சிவப்பு, சந்திரன்  வெள்ளை, செவ்வாய்  சிவப்பு, புதன்  பச்சை, குரு  மஞ்சள், சுக்ரன்  வெள்ளை, சனி கருப்பு, ராஹு  நீலம், கேது  பலவண்ணம்.)
8. 9 கிண்ணங்கள் (தொன்னை, இலையினால் செய்யப்பட்டது)
9. பல்வேறு புஷ்பங்கள்.
10. இவற்றைத் தவிர மற்ற வேண்டிய பொருட்கள் பட்டியல்

பொதுவாக பூஜைக்கு தேவையான பொருட்கள்

1. மஞ்சள் பொடி
2. குங்குமம்
3. சந்தனம்
4. பூமாலை
5. உதிரிப்பூக்கள்
6. வெற்றிலை, பாக்கு
7. ஊதுபத்தி
8. சாம்பிராணி
9. பஞ்சு (திரிக்காக)
10. நல்லெண்ணெய்
11. கற்பூரம்
12. வெல்லம்
13. மாவிலை
14. வாழைப்பழம்
15. அரிசி
16. தேங்காய்
17. தயிர்
18. தேன்
19. தீப்பெட்டி
20. பூணூல்
21. வஸ்த்ரம்
22. அக்ஷதை (பச்சரிசியுடன் மஞ்சள் பொடி கலந்தது)
23. பஞ்சாம்ருதம் (வாழைப்பழம், பால், தேன், நெய், சர்க்கரை, கலந்தது)
24. கோலப்பொடி / அரிசி மாவு
25. பஞ்சகவ்யம்:
1. பசுவின் சிறுநீர் (கோமியம்), 2. பசுவின் சாணம், 3. பால், 4. தயிர், 5. நெய்  இவை ஐந்தும் சேர்ந்த கலவையே பஞ்ச கவ்யமாகும்.
26. திராட்சை, கல்கண்டு, சர்க்கரை கலந்த பசுவின் பால்.

குறிப்பு: ஹோமங்களுக்கு நெய் உபயோகிப்பது உத்தமம். ஒரு சில பூஜைகளில் நவதான்னியங்கள், கருகு மணிமாலை, பனைஓலை, மஞ்சள் கொத்து, ஏலக்காய் பொடி, கண் மை, அகல் விளக்கு, மூங்கில் தட்டு, பஞ்சினால் செய்த மாலை, போன்ற சில விசேஷ பொருட்கள் தேவைப்படுகின்றன. அந்தந்த பூஜையை செய்யும்போது அதற்கு தேவையானவற்றை முதலிலேயை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

மாற்றுப் பொருள்கள்

பூஜைக்கு உரிய சில பொருள்கள் கிடைக்காமலிருக்கலாம். இந்த நிலையில் ஒரு பொருளுக்குப்பதிலாக இந்தப் பொருள்தான் மாற்றுப் பொருள் என்பது விரத கல்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை.

1. தேனுக்குப் பதிலாக வெல்லம்,
2. வஸ்த்ரம், ஆபரணம், சத்ரம், சாமரம், முதலிய ராஜோபசாரங்களுக்குப் பதிலாக அக்ஷதை (அ) புஷ்பம்.

கலசம் வைக்கும் முறை

1. கலசம் வைக்கும் இடத்தில் கோலமாவினால் மூன்று ஷட்கோணங்களை வரைந்து கொள்ளவும்.

2. கோலத்திற்கு மத்தியில் ‘ஓம் ’ என்ற ப்ரணவ மந்த்ரத்தை எழுதவும்.

3. கோலத்தினால் ஆன 3 ஷட்கோணத்திற்கு மேல் மூன்று வாழை இலைகளை வைக்கவும்.

4. வாழை இலைகளின் மீது அரிசியைப் பரப்பவும்.

5. வெள்ளி, பித்தளை, செம்பினால் ஆன கலசத்தை நூலினால் சுற்றவும்.

6. மூன்று கலசங்களையும், வாழை இலைகளில் பரப்பியுள்ள அரிசியின் மீது வைக்கவும்.

7. ஏலக்காய் பொடி, பச்சை கற்பூரம், குங்குமப்பூ ஆகியவை கலந்த சுத்தமான நீரை கலசத்தில் நிரப்பவும்.

8. கலசத்தின் உள்ளே மாவிலைகளை வைத்து கலசத்திற்கு சந்தனம், குங்குமம் இடவும்.

9. மஞ்சள் பொடியை தண்ணீரில் விட்டு கெட்டியாக குழைத்து உரித்த தேங்காயின் மீது பூசி கலசத்தின் மீது மாவிலைகளுடன் சேர்த்து வைக்கவும்.

10. இரண்டு வஸ்திரத்தை கலசத்திற்கு அணிவிப்பதுடன் அதற்கு மாலையும் சார்த்தவும்.

11. ஒரு கொத்து தர்ப்பையை ப்ரதான கலசத்தின் மீது வைக்கவும்.

12. ஸத்யநாராயண படமோ, ப்ரதிமையோ இருந்தால் அதற்கு சந்தனம், குங்குமம், மாலை இவற்றை வைத்து அலங்கரித்து பூஜை செய்யும் இடத்தில் வைக்கவும்.

13. யந்திரம் இருந்தால் அதையும் பூஜை செய்யும் இடத்திற்கு அருகே வைத்து மலர்கள், சந்தனம், குங்குமத்தால் அலங்கரிக்கவும்.

14. 9 கிண்ணங்களில் (தொன்னை) தானியங்களை நிரப்பி அவற்றை நவக்ரஹங்களுக்காக பூஜை செய்யுமிடத்தின் முன்னால் வைக்கவும்.

(ஸூர்யன்  கோதுமை, சந்திரன்  அரிசி, செவ்வாய்  துவரை, புதன்  பச்சைப்பயறு, குரு  கடலை, சுக்ரன்  மொச்சை, சனி  எள், ராஹு  உளுந்து, கேது கொள்ளு.)

15. அ. முதலாவது சிறிய கலசம், கணபத்தியாதி பஞ்சலோகபால பூஜைக்காக

ஆ. இரண்டாவது பெரிய கலசம், ஸ்ரீஸத்யநாராயண பூஜைக்காக

இ. மூன்றாவது சிறிய கலசம், இந்திராதி அஷ்டதிக் பாலக பூஜைக்காக

16. நைவேத்ய பொருட்கள்: கேஸரி, சாதம், பாயசம், சர்க்கரைப் பொங்கல், பருப்பு, பழங்கள், பட்சணங்கள், தேங்காய், வெற்றிலை, பாக்கு.

(இவை எல்லாவற்றையும் சரியான முறையில் வைத்துக் கொண்ட பிறகே பூஜையைத் தொடங்க வேண்டும்.)

கேஸரி செய்யும் முறை

தேவையான பொருட்கள்: 5 கப் நெய், 5 கப் ரவை, 5கப் சர்க்கரை, 5 கப் பால், 5. வாழைப்பழம்.

ரவையை நன்றாக வறுத்து, அதில் மேலே குறிப்பிட்டபடி ஐந்து ஐந்து கிண்ணம் நெய், சர்க்கரை, பால் வாழை பழம் சேர்த்துக் கேஸரி செய்ய வேண்டும்.

ஸ்ரீ ஸத்யநாராயண பூஜை

1. பூர்வாங்க பூஜைகள்

முதலில் பக்கம் 10 பக்கம் முதல் பக்கம் 14ம் பக்கம் வரை உள்ள (தீபம் + ஆசமனம் + குரு த்யானம் +கணபதி  தியானம் + ப்ராணாயாமம் + ஸங்கல்பம் + ஆஸன பூஜை + ஆத்ம பூஜை) பூர்வாங்க பூஜைகளைச் செய்யவும்.

1. பூர்வாங்க பூஜை

1. தீப மந்திரம்

(விளக்கை ஏற்றி வைத்து, தீபத்தைப் பார்த்து, இந்த மந்திரத்தை சொல்லி புஷ்பம் போடவும்)

தீபஜ்யோதி: பரம் ப்ரஹ்ம
தீபஜ்யோதிர் ஜனார்த்தன:
தீபோ ஹரது மே பாபம்
தீபஜ்யோதிர் நமோஸஸ்து தே

2. ஆசமனம்

(நமது வலதுகை விரல்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு தெய்வம் குடியிருப்பதாக ஐதீகம். இதே போல் நமது அங்கத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு தெய்வம் வசிப்பதாகக் கூறப்படுகிறது. ஆசமனம், அங்கவந்தனம் ஆகியன செய்தால், நமது உள்ளமும், உடலும் சுத்தமாகிறது என்று சாஸ்திரங்கள் கூறுவதை நாம் உணர வேண்டும். எல்லா நித்ய கர்மாக்களுக்கும், வைதிக கர்மாக்களுக்கும் ஆசமனம், அங்க வந்தனம் இன்றியமையாததாகும்.)

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து வலது உள்ளங் கையில் விட்டுக்கொண்டு கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லி சப்தமின்றி எச்சில் படாமல் மூன்று முறை உட்கொள்ளவும்.) (ஆண்கள் மற்றும் பெண்களுக்கு)

ஓம் அச்யுதாய நம:
ஓம் அனந்தாய நம:
ஓம் கோவிந்தாய நம:

அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)

(ஒவ்வொரு மந்திரத்தை சொல்லும் போது அந்தந்த மந்திரங்களுக்கு நேர் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த விரல்களால் ஸ்பரிசத்துக் கொள்ள வேண்டும்.)

1. கேச ’வ  வலக்கைக் கட்டை விரல் வலக்கன்னம்
2. நாராயண  வலக்கைக் கட்டைவிரல் இடக்கன்னம்
3. மாதவ  வலக்கை மோதிர விரல் வலக்கண்
4. கோவிந்த  வலக்கை மோதிர விரல் இடக்கண்
5. விஷ்ணு  வலக்கை ஆள்காட்டிவிரல், வலது நாசி
6. மதுஸூதன  வலக்கை ஆள்காட்டி விரல், இடது நாசி
7. த்ரிவிக்ரம்  வலக்கை சிறுவிரல், வலது காது
8. வாமன  வலக்கை சிறுவிரல் இடது காது
9. ஸ்ரீதர  வலக்கை நடுவிரல், வலதுதோள்
10. ஹ்ருஷீகேச ’ வலக்கை நடுவிரல், இடது தோள்
11. பத்மநாப  நான்கு விரல்களும் சேர்த்து, நாபி (தொப்புள்)
12. தாமோதர  ஐந்து விரல்களும் சேர்த்து, தலை

குரு த்யானம்

குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு:
குருர்தேவோ மஹேச் ’ வர:
குருஸ்ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம
தஸ்மை ஸ்ரீகுரவே நம:

4. கணபதி தியானம்

இரண்டு கைகளிலும் அக்ஷதை எடுத்துக் கொண்டு படத்தில் உள்ளதுபோல் 5 முறை குட்டிக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.

சு’க்லாம்பரதரம் விஷ்ணும்
ச ’ சி’ வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோபசா ’ந்தயே

5. ப்ராணாயாமம்

(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கையிலும், மூச்சை மெதுவாக வெளியிடும் போதும், இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாகச் சொல்லக்கூடாது. படத்தில் உள்ளது போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டியது.)

ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ:, ஓம்
மஹ:, ஓம் ஜன:, ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம்
தத்ஸவிதுர் வரேண்யம், பர்க்கோ
தேவஸ்ய தீமஹி, தியோ யோ ந:
ப்ரசோதயாத் ஓமாபோ ஜ்யோதீ
ரஸ:, அம்ருதம் ப்ரஹ்ம, பூர்ப்புவஸ்
ஸுவரோம்

(மந்திரம் சொல்லி முடித்தவுடன் வலது காதை தொடவும்.)

6. ஸங்கல்பம்

(வலது கையில் அக்ஷதையை எடுத்து, கையை மூடிக்கொண்டு, இடது கையுடன் சேர்த்து வலது தொடையில் வைத்துக் கீழ்கண்ட மந்திரம் சொன்ன பிறகு, அக்ஷதையை வடக்கே போடவும்.)

மமோபாத்த ஸமஸ்த துரித, க்ஷயத்வாரா ஸ்ரீ
பரமேச்’வர ப்ரீத்யர்த்தம்,
கரிஷ்யமாணஸ்ய கர்மண:
நிர்விக்னேன பரிஸமாப்த்
யர்த்தம் ஆதௌ விக்னே
ச்’வர பூஜாம் கரிஷ்யே

7. ஆஸன பூஜை

(பூஜை ஆரம்பிக்கும் முன் நாம் அமரும் ஆசனம் / பலகையை சுத்தப்படுத்துவதற்காக, கீழ்க்காணும் மந்திரங்களை சொல்லி தீர்த்தம் தெளித்து பிறகு அமர்ந்து கொள்ளவும்.)

ப்ருத்வி த்வயா த்ருதா லோகா
தேவி த்வம் விஷ்ணுனா த்ருதா
த்வம் ச தாரய மாம் தேவி
பவித்ரம் குரு ச ஆஸனம்

8. ஆத்ம பூஜை

(மனதை ஒருநிலைப்படுத்தி இறைவனை தியானித்து கீழ்காணும் மந்திரங்களைச் சொல்லி தலையில் அக்ஷதையைப் போட்டுக்கொள்ளவும்.)

தேஹோ தேவாலய: ப்ரோக்த:
ஜீவோ தேவ: ஸநாதன:
த்யஜேத் அஜ்ஞான நிர்மால்யம்
ஸோஹம்பாவேன பூஜயேத்

விக்னேச்’வர பூஜை
மஞ்சள் பிள்ளையார் பூஜை

இப்பூஜையானது எல்லா ப்ரதான பூஜைகளுக்கும் மற்றும் எல்லா சுபகாரியங்களுக்கும் முதலில், ஆரம்பத்தில் செய்ய வேண்டிய பூஜையாகும்.

தீப மந்திரம்

(விளக்கை ஏற்றி வைத்து தீபத்தை பார்த்து இந்த மந்திரத்தை சொல்லி புஷ்பம் போடவும்)

தீபஜோதி: பரம் ப்ரஹ்ம
தீபஜ்யோதிர் ஜனார்த்தன:
தீபோ மே ஹரது பாபம்
தீபஜ்யோதிர் நமோஸ்து தே

ஆசமனம்

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து வலது உள்ளங்கையில் விட்டுக் கொண்டு  கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லி, சப்தமின்றி எச்சில் படாமல் மூன்று முறை உட்கொள்ளவும்.) (ஆண்கள் மற்றும் பெண்களுக்கு)

ஓம் அச்யுதாய நம:
ஓம் அனந்தாய நம:
ஓம் கோவிந்தாய நம:

அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)

ஒவ்வொரு மந்திரத்தை சொல்லும் போது அந்தந்த மந்திரங்களுக்கு நேர் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த விரல்களால் ஸ்பரிசித்துக் கொள்ள வேண்டும்.

அங்கவந்தனம் (ஆண்கள் மட்டும்)

1. கேச ’வ  வலக்கைக் கட்டைவிரல் வலக்கன்னம்
2. நாராயண  வலக்கைக் கட்டைவிரல் இடக்கன்னம்
3. மாதவ  வலக்கை மோதிர விரல், வலக்கண்
4. கோவிந்த  வலக்கை மோதிரவிரல், இடக்கண்
5. விஷ்ணு  வலக்கை ஆள்காட்டிவிரல், வலது நாசி
6. மதுஸூதன  வலக்கை ஆள்காட்டி விரல், இடது நாசி
7. த்ரிவிக்ரம  வலக்கை சிறுவிரல், வலது காது
8. வாமன வலக்கை சிறுவிரல், இடது காது
9. ஸ்ரீதர  வலக்கை நடுவிரல், வலதுதோள்
10. ஹ்ருஷீகேச ’  வலக்கை நடுவிரல், இடதுதோள்
11. பத்மநாப  நான்கு விரல்களும் சேர்த்து, நாபி (தொப்புள்)
12. தாமோதர  ஐந்து விரல்களும் சேர்த்து, தலை.

தியானம்

வலது கையில் அக்ஷதை எடுத்துக் கொண்டு படத்தில் உள்ளதுபோல் 5 முறை குட்டிக்கொண்டு கீழ்க் கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.

சு’க்லாம்பரதரம் விஷ்ணும்
ச ’ சி’ வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோபசா ’ ந்தயே

ப்ராணாயாமம்

(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கி மனதிற்குள்ளும், மூச்சை மெதுவாக வெளியிடும்போதும் இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாக சொல்லக்கூடாது. படத்தில் உள்ளது போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டியது.)

ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன:,
ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸவிதுர்
வரேண்யம், பர்க்கோதேவஸ்ய
தீமஹி, தியோ யோ ந: ப்ரசோ
தயாத் ஓமாபோ ஜ்யோதீரஸ:,
அம்ருதம் ப்ரஹ்ம பூர்ப்புவஸ்ஸுவரேம்
(வலது காதை தொடவும்.)

ஸங்கல்பம்

வலது கையில் அக்ஷதையை எடுத்து, கையை மூடிக் கொண்டு, இடது கை மேல் வலது தொடையில் வைத்துக் கீழ்கண்ட மந்திரம் சொன்ன பிறகு அக்ஷதையை வடக்கே போடவும்.

மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ
பரமேச்’ வர ப்ரீத்யர்த்தம், கரிஷ்யமாணஸ்ய
கர்மண: நிர்விக்னேன பரிஸமாப்த்யர்த்தம்
ஆதௌ விக்னேச்’வர பூஜாம் கரிஷ்யே

குறிப்பு: மஞ்சள் பொடியை தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கூம்பு வடிவில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பிரார்த்தனை

(மஞ்சள் பிள்ளையாருக்கு கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்லி ஆவாஹனம் (விக்னேஸ்வரரை வரவழைத்தல்) செய்து, புஷ்பம், அக்ஷதையை போடவும்.) வேத மந்திரங்களை ஸ்வரத்துடன் சொல்பவர்கள் மட்டுமே கீழ்கண்ட மந்திரங்களைச் சொல்லவும்.

கணானாம் த்வா கணபதிகும் ஹவாமஹே
கவிம் கவீநாம் உபமச்’ரவஸ்தமம்
ஜ்யேஷ்டராஜம் ப்ரஹ்மணாம் ப்ரஹ்மணஸ்பத
ஆந: ச்’ ருண்வந்நூதிபிஸ் ஸீத ஸாதனம்
அஸ்மின் ஹரித்ராபிம்பே
விக்னேச்’ வரம் த்யாயாமி,
விக்னேச்’வரம் ஆவாஹயாமி

(மற்றவர்கள் கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்லலாம்.)

அகஜானன பத்மார்க்கம்
கஜானனம் அகர்நிஷம்
அனேகதம்தம் பக்தானாம்
ஏகதந்தம் உபாஸ்மஹே

அஸ்மின் ஹரித்ராபிம்பே விக்னேச்’வரம்
த்யாயாமி, விக்னேச்’வரம் ஆவாஹயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு புஷ்பம், அக்ஷதை போட்டு கீழ்கண்ட மந்திரம் சொல்லி பிள்ளையாரை ஆசனத்தில் அமர்த்தியதாக பாவனை செய்ய வேண்டும்.)

விக்னேச்’வராய நம:
ஆஸனம் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாரின் திருவடிகளை அலம்புதல். உத்தரணியில் தீர்த்தம் எடுத்து பிள்ளையாரின் திருவடிக்கு நேராகக் காட்டி அர்க்ய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்.)

விக்னேச்’ வராய நம:
பாத்யம் ஸமர்ப்பயாமி

(கீழ்கண்ட மந்திரம் சொல்லி உத்தரணியில் தீர்த்தம் எடுத்து பிள்ளையாரின் கைகளில் அளிப்பதுபோல பாவனை செய்து தீர்த்தத்தை அர்க்ய பாத்திரத்தில் சேர்க்க வேண்டும்.)

விக்னேச்’வராய நம:
அர்க்யம் ஸமர்ப்பயாமி

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து தெய்வத்தின் வாய்க்கு நேராக காட்டி அர்க்யபாத்திரத்தில் விடவும்.)

விக்னேச் ’வராய நம:
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையார் மீது தீர்த்தத்தை தெளிக்கவும்)

விக்னேச் ’ வராய நம:
ஸ்நானம் ஸமர்ப்பயாமி

(அர்க்யபாத்திரத்தில் ஜலம் விடவும்)

விக்னேச் ’வராய நம: ஸ்நாநாநந்தரம்
ஆசமனீயம் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு வஸ்த்ரம் அளிப்பது போல் அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்)

விக்னேச்’ வராய நம:
வஸ்த்ரார்த்தம் அக்ஷதான்
ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு பூணூலுக்கு பதிலாக அக்ஷதை ஸமர்ப்பிக்கவும்.)

விக்னேச் ’ வராய நம: யக்ஞோப
வீதார்த்தம் அக்ஷதான்
ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு நெற்றியில் சந்தனம் வைக்கவும்)

விக்னேச் ’ வராய நம: கந்தாம்
ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு குங்குமம் வைக்கவும்.)

விக்னேச் ’வராய நம: கந்தோபரி
குங்குமம் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு அக்ஷதையை சமர்ப்பிக்கவும்.)

விக்னேச்’வராய நம: அக்ஷதான் ஸமர்ப்பயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு உதிரி புஷ்பங்களை சமர்ப்பிக்கவும்.)

விக்னேச்’ வராய நம:
புஷ்பை: பூஜயாமி

அர்ச்சனை

(மஞ்சள் பிள்ளையாரை பல பெயர்களில் புஷ்பங்களால் அர்ச்சனை செய்யவும்.)

ஓம் ஸுமுகாய நம:
ஓம் ஏகதந்தாய நம:
ஓம் கபிலாய நம:
ஓம் கஜகர்ணகாய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் விகடாய நம:
ஓம் விக்னராஜாய நம:
ஓம் விநாயகாய நம:
ஓம் தூமகேதவே நம:
ஓம் கணாத்யக்ஷாய நம:
ஓம் பாலசந்த்ராய நம:
ஓம் கஜானனாய நம:
ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் சூ’ர்ப்ப கர்ணாய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:
ஓம் மஹாகணபதயே நம:

நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி. (அக்ஷதை, புஷ்பம், போடவும்.)

தூபதீபார்த்தம் அக்ஷதான் ஸமர்ப்பயாமி.
(அக்ஷதை, புஷ்பம் போடவும்.)

நிவேதன மந்த்ரங்கள்

(தரையில் சிறிது தண்ணீர் தெளித்து, சுத்தம் செய்து வெற்றிலை, பாக்கு, பழம் முதலியவற்றை தாம்பாளத்தில் வைத்து கீழ்கண்ட மந்திரத்தைச் சொல்லவும்.)

ஓம் பூர்புவஸ்ஸுவ:

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி தீர்த்தத்தை நைவேத்ய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

தத்ஸவிதுர்வரேண்யம்
பர்கோதேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்

(தீர்த்தத்தை நைவேத்யங்களின் மேல் தெளிக்கவும்.)

(பிறகு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லி, தீர்த்தத்தை நைவேத்திய தட்டின் இடப்புறத்திலிருந்து வலப்புறமாக சுற்றி கீழே விட வேண்டும்.)

(காலையில் பூஜை செய்தால்)

தேவஸவித: ப்ரஸுவ
ஸத்யம் த்வர்த்தேன பரிஷிஞ்சாமி
(மாலையில் பூஜை செய்தால்)

தேவஸவித: ப்ரஸுவ
ருதம் த்வா ஸத்யேன பரிஷிஞ்சாமி
அம்ருதமஸ்து
அம்ருதோபஸ்தரணமஸி

(தீர்த்தத்தை எடுத்து அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

(பிறகு கீழ்கண்ட மந்திரத்தை சொல்லி ஒவ்வொரு முறையும் ஸ்வாஹா என்று சொன்ன பிறகு படத்தில் உள்ளது போல் ஸ்வாமிக்கு அன்னம் ஊட்டுவது போல் கையால் காண்பித்து நைவேத்யம் பண்ணவும்.)

ஓம் ப்ராணாய ஸ்வாஹா,
ஓம் அபானாய ஸ்வாஹா,
ஓம் வ்யாநாய ஸ்வாஹா,
ஓம் உதானாய ஸ்வாஹா,
ஓம் ஸமானாய ஸ்வாஹா,
ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா,

ப்ரஹ்மணீம ஆத்மா அம்ருதத்வாய, விக்னேச்’ வராய நம: நாளீகேர கண்ட த்வயம், கதலீபலம் நிவேதயாமி.

மத்யே மத்யே பானீயம்
ஸமர்ப்பயாமி.

(தீர்த்தத்தை அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

அம்ருதாபிதாநமஸி
(ஆசமனீயம் ஸமர்ப்பயாமி)

(உத்தரணியில் தீர்த்தம் எடுத்து இரண்டு முறை அர்க்ய பாத்திரத்தில் விடவும்.)

பூகீபல ஸமாயுக்தம்
நாகவல்லீ தளைர்யுதம்
கர்ப்பூர சூர்ண ஸம்யுக்தம்
தாம்பூலம் ப்ரதிக்ருஹ்யதாம்

விக்னேச் ’ வராய நம: தாம்பூலம் ஸமர்ப்பயாமி (வெற்றிலை பாக்கு தாம்பூலத்தில் சிறிதளவு ஜலம் விட்டு நிவேதனம் செய்யவும்.)

தீபாராதனை

விக்னேச்’வராய நம:
கற்பூர நீராஜனம் ஸந்தர்சயாமி

(மஞ்சள் பிள்ளையாருக்கு கற்பூர ஆரத்தி காட்டவும்.)

ஸமஸ்தோபசாரான் ஸமர்ப்பயாமி
(புஷ்பத்தை ஸ்வாமியிடம் ஸமர்ப்பிக்கவும்.)

ப்ராத்தனை

வக்ரதுண்ட மஹாகாய
ஸூர்யகோடி ஸமப்ரப
அவிக்னம் குரு மே தேவ
ஸர்வகார்யேஷு ஸர்வதா
விக்னேச் ’ வராய நம: ப்ரார்த்தயாமி

(என்று புஷ்பத்தை ஸ்வாமியிடம் ஸமர்ப்பித்து நமஸ்காரம் செய்யவும்)

3. ப்ரதான பூஜை

த்யானம்

சு’க்லாம்............ சா’ந்தயே

சு’க்லாம்பரதரம் விஷ்ணும்
ச ’சி’ வர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்னோபசா ’ந்தயே

ப்ராணாயாமம்

ஓம் பூ...... பூர்ப்புவஸ்ஸுவரோம்

ப்ராணாயாமம்

(மூச்சை உள்ளே இழுக்கும்போதும், மூச்சை உள்ளடக்கி மனதிற்குள்ளும், மூச்சை மெதுவாக வெளியிடும்போதும் இந்த மந்திரத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும். வெளிப்படையாக வாயால், சத்தமாக சொல்லக்கூடாது. படத்தில் உள்ளது போல் மூக்கைப் பிடித்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்ல வேண்டியது.)

ஓம் பூ: ஓம் புவ: ஓகும் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன:,
ஓம் தப:, ஓகும் ஸத்யம், ஓம் தத்ஸவிதுர்
வரேண்யம், பர்க்கோதேவஸ்ய
தீமஹி, தியோ யோ ந: ப்ரசோ
தயாத் ஓமாபோ ஜ்யோதீரஸ:,
அம்ருதம் ப்ரஹ்ம பூர்ப்புவஸ்ஸுவரேம்
(மந்திரம் சொல்லி முடித்தவுடன் வலது காதை தொடவும்.)

 
மேலும் சம்ப்ரதாய விரத பூஜா விதானம் 32. சத்யநாராயண பூஜை »
பிரதான பூஜைக்குரிய ஸங்கல்ப விளக்கம்(நாம் எந்த ஸ்வாமியைக் குறித்து பூஜை செய்கிறோமோ மற்றும் நாம் எந்த ... மேலும்
 

நவக்ரஹ அர்ச்சனை நவம்பர் 09,2018

ஆதித்யாதி நவக்ரஹ தேவதாப்யோ நம:ஆஸனம் ஸமர்ப்பயாமி(அக்ஷதையை தான்ய கிண்ணத்தில் ஸமர்ப்பிக்கவும்.)அர்க்யம் ... மேலும்
 
ரீ ஸத்யநாராயண அஷ்டோத்தரச’த நாமாவளி:(ஸத்யநாராயணருக்கு பூக்கள் மற்றும் அக்ஷதையால் அர்ச்சனை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar