பதிவு செய்த நாள்
13
பிப்
2012
10:02
திருநெல்வேலி : வண்ணார்பேட்டையில் ராதா கல்யாண மஹோத்ஸவம் கோலாகலமாக நடந்தது. வண்ணார்பேட்டையில் ஆண்டுதோறும் ராதா கல்யாண மஹோத்ஸவம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ராதா கல்யாண மஹோத்ஸவம் நேற்று முன்தினம் அஷ்டபதி பஜனையுடன் துவங்கியது. இரவு திவ்யநாம பஜனை நடந்தது. ராதா கல்யாண மஹோத்ஸவமான நேற்று காலையில் சம்பிரதாய உஞ்சவிருத்தி, பஜனை நடந்தது. தொடர்ந்து ராதா-கிருஷ்ணன் கல்யாண மஹோத்ஸவம், திருமாங்கல்யதாரணம், ஆஞ்சநேய உற்சவம் நடந்தது. உற்சவத்தை கடையநல்லூர் சத்ருகணன் பாகவதர், சீதாராம பாகவதர், நாராயணன், அரவிந்த், குமார், கார்த்திக் மற்றும் ராஜகோபால கிருஷ்ணசுவாமி பஜனை மண்டலியினர் நடத்திவைத்தனர்.இதில் டாக்டர் சிவராமகிருஷ்ணன், சி.ஆர்.எஸ்.மணி, பி.எஸ்.கிருஷ்ணன், ராமன், ராகவன், கைலாசம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை வண்ணார்பேட்டை பாகவத பெரியவர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.