Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ... மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) போட்டியில் வெற்றி மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ...
முதல் பக்கம் » தை ராசி பலன் (15.1.2026 முதல் 12.2.2026 வரை)
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) வீடு வாங்கும் யோகம்
எழுத்தின் அளவு:
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) வீடு வாங்கும் யோகம்

பதிவு செய்த நாள்

12 நவ
2018
01:11

இந்த மாதம் புதன் டிச.7 வரை நன்மை தருவார். அதன் பிறகு வக்கிர நிவர்த்தி அடைந்து சாதகமற்ற இடத்திற்கு சென்றாலும் கவலை கொள்ளத் தேவையில்லை. காரணம் சுக்கிரன், செவ்வாய் இருவரும் மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பார்கள்.

பூமிகாரகரான செவ்வாயால் பக்தி எண்ணம் மேம்படும். எடுத்த செயல்கள் அனைத்திலும் வெற்றி காணலாம். பொருளாதார வளம் சிறக்கும். கல்விக்காரகரான புதன் தற்போது வக்கிரம் அடைந்து  துலாமில் இருக்கிறார். அதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதார வளம் உயரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய முயற்சி வெற்றி பெறும். டிச.8 ல் 12-ம் இடமான விருச்சிகத்திற்கு மாறுகிறார். அங்கு புதனால் எதிரி தொல்லை வரலாம். உங்களின் முயற்சிகளில் தடைகளைச் சந்திக்கும் நிலை உருவாகலாம்.

உடல் நலத்தில் அக்கறை காட்டவேண்டியதிருக்கும். சூரியன் 12-ம் இடமான விருச்சிகத்தில் இருப்பதால் பணியில் இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சொந்தபந்தங்களின் வருகை இருக்கும். செவ்வாய் சிறப்பான இடத்தில் உள்ளதால் புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் கூடி வரும். நவ.18,19,20ல் உறவினர் வகையில் அவ்வளவு அனுகூலம் இருக்காது. அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். ஆனால் டிச.4,5ல் அவர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் உண்டாகும். டிச.8,9,10ல் பெண்கள் மிகவும் உதவிகரமாக செயல்படுவர். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது.

பணியாளர்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் காண்பர். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். அதிகாரிகளின் ஆதரவு நல்லமுறையில் இருக்கும். கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். டிச.2,3ல் சிறப்பான நன்மையைக் காணலாம். தனியார் துறையில் பணிபுரிபவர்கள் சிறப்பான வளர்ச்சி காணலாம். சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். கோரிக்கைகளை டிச.7க்குள் கேட்டு பெற்று கொள்ளவும்.  அதன் பிறகு வேலைப் பளு அதிகரிக்கும். பணிநிமித்தமாக அலைச்சல் ஏற்படும்.

வியாபாரிகள் அலைச்சல், பகைவரால் தொல்லையை சந்திக்க வேண்டியதிருக்கும். தொழில் ரீதியான வெளியூர் பயணம் அடிக்கடி உண்டாகும். முதலீட்டை அதிகப்படுத்த  வேண்டாம். ஆனால் உங்கள் அறிவைப் பயன்படுத்தி தொழிலில் அதிக ஆதாயம் காணலாம். புதிய வியாபார முயற்சியில் ஈடுபட வேண்டாம்.
இருப்பதை திறமையாக நடத்தினால் போதும். ஆன்மிக சம்பந்தப்பட்ட மற்றும் பூஜை பொருள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபம் காண்பர். டிச.6,7,11,12ல் சந்திரனால் சிறு தடைகள் வரலாம். நவ.23,24ல் எதிரிகளின் இடையூறை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள்.

கலைஞர்கள் விடாமுயற்சியால் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவர். அரசியல்வாதிகள், பொதுநல தொண்டர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பர். எதிரிகள் வகையில் இருந்த தொல்லை, அவப்பெயர், போட்டிகள் முதலியன மறையும்.  மாணவர்களுக்கு புதன் சாதகமாக காணப்படுவதால் வளர்ச்சி உண்டாகும். பொது அறிவில் சிறந்து விளங்குவர். டிச.7க்கு பிறகு  சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும். ஆசிரியர்கள் ஆலோசனைகளை ஏற்று நடந்தால் நன்மை கிடைக்கும்.

விவசாயிகள் கரும்பு, எள், கீரை, காய்கறி வகைகளில் நல்ல மகசூல் காணலாம். கால்நடை வளர்ப்பின் மூலம் ஆதாயம் பெருகும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும்.

பெண்கள் குடும்பத்தில் நற்பெயர் எடுப்பர். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். டிச.7க்கு பிறகு அத்யாவசிய செலவைத் தவிர மற்றதை தவிர்க்கவும்.  வேலைக்கு செல்லும் பெண்கள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். நவ.25,26ல்  விருந்து, விழா என சென்று வர வாய்ப்புண்டு.  

* நல்ல நாள்: நவ.17, 23, 24, 25, 26, டிச.2, 3, 4, 5, 8, 9, 10, 13, 14, 15
* கவன நாள்: நவ.27, 28 சந்திராஷ்டமம்.
* அதிர்ஷ்ட எண்: 2, 3
* நிறம்: சிவப்பு, பச்சை

* பரிகாரம்:
● சனிக்கிழமையன்று சனீஸ்வரருக்கு எள்தீபம்
● சங்கடஹர சதுர்த்தியன்று அருகம்புல் மாலை
● வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி வழிபாடு

 
மேலும் தை ராசி பலன் (15.1.2026 முதல் 12.2.2026 வரை) »
temple news
மேஷம்: அசுவினி..: தை பிறந்தால் வழி பிறக்கும் என்று காத்திருந்தவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். ... மேலும்
 
temple news
ரிஷபம்: கார்த்திகை 2,3,4 ம் பாதம்:  சுயமாக சிந்தித்து வெற்றி பெறும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் ... மேலும்
 
temple news
மிதுனம்: மிருகசீரிடம் 3,4 ம் பாதம்:தன்னம்பிக்கையுடன் செயல்படும் உங்களுக்கு பிறக்கும் தை மாதத்தில் ... மேலும்
 
temple news
கடகம்: புனர்பூசம் 4 ம் பாதம்: நாளை வருவதை முன்னதாக அறிந்து செயல்படும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் ... மேலும்
 
temple news
சிம்மம்: மகம்..: தெய்வமே துணை என்ற எண்ணமுடன் வாழும் உங்களுக்கு,  பிரகாசமான மாதமாக தை இருக்கும். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar