பேரையூர் அருகே சிலைமலைப்பட்டியில் கார்த்திகை விளக்குகள் தயாரிப்பு தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12நவ 2018 03:11
பேரையூர்:பேரையூர் அருகே சிலைமலைப்பட்டியில் களிமண்ணை பயன்படுத்தி கார்த்திகை திருவிளக்குகள் தயாரிக்கும் பணி நடக்கிறது.
இங்கு பல ஆண்டுகளாக களிமண் மூலம் கார்த்திகை விளக்குகள், அணையாவிளக்குகள், கேரளா விளக்குகள், பனியார சட்டிகள், சப்பாத்தி சட்டிகள், குபேந்திரன் விளக்குகள் தயாரிக்கப்படுகிறது. தற்போது திருக்கார்த்திகை விழாவிற்காக விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
தொழிலாளர்கள் கூறியதாவது: நான்கு தலை முறைகளாக இத்தொழிலில் ஈடுபட்டுள்ளோம். ஆண்டுதோறும் வேலை இருந்தாலும், சீசனுக்கு தகுந்தவாறு முக்கியத்துவம் கொடுக்கி றோம். விளக்குகள் தயாரிக்க தேவையான களிமண் இப்பகுதியில் கிடைக்கிறது.
அம்மண்ணை நன்றாக குலைத்து, பக்குவத்திற்கு வந்தவுடன் சுழலும் கரத்தின் நடுவே திரட்டி வைத்து கரம் சுழல கையால் கார்த்திகை விளக்கு தயாரிப்போம். ஒரு நாளில் 700 விளக்குகள் வரை உற்பத்தி செய்வோம். விளக்குகள் வெயில், அடுப்பு மூலம் சூடுபடுத்தப்பட்டு, விற்பனை க்கு அனுப்பப்படும் என்றனர்.