திருப்புத்தூர்:திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு நாளை (நவம்., 13ல்) சூரசம்ஹாரம் நடக்கிறது.
குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் திருமுருகன் திருப்பேரவை சார்பில் 40 ம் ஆண்டு கந்த சஷ்டி விழா நடக்கிறது. நவ.,8 ல் முருகனுக்கு ராஜ அலங்காரத்துடன் விழா துவங்கியது. தினசரி மாலை 6:00 மணிக்கு அபிஷேகம் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நாளை காலை 10:30 மணிக்கு முருகனுக்கு சண்முகா அர்ச்சனை சிறப்பு அபிஷேகம், காலை 11:00 மணிக்கு தீபாராதனை நடக்கும். மாலையில் கீழரதவீதி பிள்ளையார் தேர் அருகில் சூரனை முருகன் வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கும். .நவ.,14 காலை 10:30 மணிக்கு சுப்பிரமணிய சுவாமிக்கும் தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கும்.