பதிவு செய்த நாள்
12
நவ
2018
03:11
வெண்ணந்தூர்: வெண்ணந்தூர், செங்குந்தர் முத்துகுமார சுவாமி கோவிலில் நவ., 13ல், சூரசம்ஹார திருவிழா நடக்கிறது. கடந்த, 8ல், சுப்ரமணிய சுவாமிக்கு தேவ சேனாதிபதி பட்டமும், கங்கணமும் கட்டி சக்தியிடம் வேல் தரும் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. 9ல் மூலவருக்கு அபிஷேக ஆராதனை நடந்தது.
இன்று (நவம்., 12ல்) மாலை, 7:00 மணிக்கு கோவில் வளாகத்தில் தேவார திருப்புகழ் பாராயணம் நடக்கிறது. நாளை (நவம்., 13ல்) மதியம், 2:30 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில், சுப்ரமணிய சுவாமி சூரனை வதம் செய்தல் மற்றும் வாணவேடிக்கை நடக்கிறது.
14 காலை, 9:30 மணிக்கு சுப்ரமணியருக்கு திருக்கல்யாணம், மொய் காணிக்கை வாங்குதல், 12:00 மணிக்கு அன்னதானம் மாலை, 4:00 மணிக்கு சுவாமி வள்ளி தெய்வானை சமேதரராக திருவீதி உலா, 6:00 மணிக்கு ஊஞ்சல் பாட்டு, இரவு, 8:00 மணிக்கு சுவாமி குடிபுகுதல் நிகழ்ச்சி நடக்கிறது.