செஞ்சி:நல்லாண்பிள்ளைபெற்றாள் பக்த ஆஞ்சநேயர் கோவிலில் திருப்பணிகள் செய்ய பாலாலய பூஜை நடந்தது.செஞ்சி அடுத்த நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமையான ஆஞ்சநேயர் கோவிலை திருப்பணிகள் செய்து புதுப்பிக்க கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக
பாலாலய யாக பூஜை நேற்று நடந்தது.காலை 8:00மணிக்கு பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்தனர். தொடர்ந்து கும்ப பிரதிஷ்டை செய்து யாக சாலை கொண்டுவந்தனர். காலை 9.00 மணிக்கு செய்யாறு ஸ்ரீதர் பட்டாச்சாரியார் தலைமையிலான பாட்டாச்சாரியார்கள் சிறப்பு யாகம் நடத்தினர். 11:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி முடிந்து, கலசங்களை திருவேங்கடமுடையான் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர்.அங்கு திருவேங்கட முடையானுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர்.