பதிவு செய்த நாள்
12
நவ
2018
03:11
வீரபாண்டி: கரபுரநாதர் கோவிலில், கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். சேலம், உத்தமசோழ புரம், கரபுரநாதர் கோவிலில், 2006ல், புதிய மரத்தேர் செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது.
கடந்த மார்ச்சில், கும்பாபிஷேகம் நடத்தியிருக்க வேண்டும். ஆனால், மராமத்து பணி நடக்காமல், கோவில் சுவர், கருவறை கோபுரத்தில், ஆங்காங்கே அரச மரச்செடிகள் வளர்ந்துள்ளன.
இதனால், கோபுரத்தில் விரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், கோபுர சிலைகளின் வண்ணங்கள், வெயில், மழையால் பொலிவிழந்துவிட்டன. இதை சரிசெய்ய, பாலாலயம் செய்து, மராமத்து பணி மேற்கொண்டு, கும்பாபிஷேகம்ம் செய்ய வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். செயல் அலுவலர் கலைச்செல்வி கூறுகையில், கும்பாபிஷேகம் நடத்த, அனுமதி கேட்டு, அரசுக்கு கடிதம் அனுப்பப்படும். அனுமதி கிடைத்ததும், கோவில் திருப் பணிக்குழு அமைத்து, உடனடியாக பணி தொடங்கும், என்றார்.