பதிவு செய்த நாள்
12
நவ
2018
03:11
ஸ்ரீவில்லிபுத்தூர்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மதுரை, செங்கோட்டை வழியாக புனலூருக்கு சிறப்பு ரயில்களை இயக்கவேண்டுமென ஐயப்ப பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சென்னையிலிருந்து காட்பாடி, சேலம், ஈரோடு, கோவை வழியாக கேரள மாநிலம் செங்கண்ணுார், திருவல்லா நகரங்களுக்கு ரயிலில் சென்று, அங்கிருந்து பத்தனம்திட்டா வழியாக பம்பைக்கு அதிகளவில் ஐயப்ப பக்தர்கள் தற்போது சென்று வருகின்றனர்.
இதற்காக கேரள வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கபடுகிறது. சென்னை, வேலூர், சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்ட மக்கள் அதிகளவில் கேரள வழியாக பயணித்து வருகின்றனர். ஆனால், பாண்டிசேரி, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், துாத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்ட மக்கள் கார்,வேன்,பஸ்களில் செங்கோட்டை, ஆரியங்காவு, தென்மலை, புனலூர், பத்தனம் திட்டா வழியாக பம்பைக்கு சென்று வருகின்றனர்.