ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மாசி மகா சிவராத்திரி மூன்றாம் திருநாளை முன்னிட்டு இன்று அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறந்து 3 முதல் 4 மணிவரை ஸ்படிக லிங்க பூஜை நடக்கிறது. காலை 5 மணிக்கு தங்க கேடயத்தில் சுவாமி, அம்பாள் வீதி உலாவை தொடர்ந்து, காலை 7 மணிக்கு ராமநாதசுவாமி வெள்ளி பூத வாகனத்திலும், பர்வதவர்த்தனி அம்பாள் வெள்ளி கிளி வாகனத்திலும் பஞ்சமூர்த்திகளுடன் கந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளுகின்றனர். இதையொட்டி இன்று மாலை 6 மணிக்கு தீபாராதனை முடிந்து சுவாமி, அம்பாள் புறப்பாடாகி வீதி உலா வந்து இரவு 10 மணிக்கு கோயிலை வந்தடைந்தவுன் அர்த்தஜாம பூஜை, பள்ளியறை பூஜை நடக்கிறது, என கோயில் இணை கமிஷனர் ஜெயராமன் தெரிவித்தார். இதையொட்டி இன்று காலை 7 முதல் இரவு 10 மணி வரை கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும். தீர்த்தக் கிணறுகளில் தீர்த்தமாடவும் பக்தர்கள் அனுமதி இல்லை.