பதிவு செய்த நாள்
14
பிப்
2012
11:02
பண்ருட்டி : பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வரும் ஜூன் 1ம் தேதி நடத்துவது என கோவில் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது. நகராட்சி சேர்மன் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். கோவில் நிர்வாக அதிகாரி நாகராஜன், அக்காத்தம்மன் காத்தவராயன், செல்வராஜ், சபாபதி, சீனுவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முன்னாள் துணை சேர்மன் கோதண்டபாணி, வியாபார சங்க பிரதிநிதிகள் சண்முகம், மோகனகிருஷ்ணன், ராஜா, வீரப்பன், பந்தல் அமைப்பாளர் கதிர்வேல், அ.தி.மு.க., நகர துணை செயலாளர் முருகன், கவுன்சிலர்கள் ராஜதுரை, ராமதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் 6 கால பூஜையுடன் யாகசாலை துவங்கி வரும் ஜூன் 1ம் தேதி கோவில் கும்பாபிஷேகம் செய்வது என தீர்மானிக்கப்பட்டது.