புதுச்சேரி : லாஸ்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவி லில் 29ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடந்தது. முன்னதாக காலை 7 மணிக்கு சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணிய சுவாமிக்கு 108 சங்காபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து காலை 11 மணிக்கு தீபாராதனையும், மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடந்தது. ஏற்பாடுகளை அறங்காவல் குழுத் தலைவர் ஆறுமுகம் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.