பதிவு செய்த நாள்
15
நவ
2018
03:11
கிருஷ்ணகிரி: சின்னமுத்தூர், புதூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கிருஷ்ணகிரி அடுத்த, சின்னமுத்தூர் கம்பளிக்கான் தெருவில் உள்ள புதூர் மாரியம்மன் கோவிலில், கடந்த, 4ல் காலை, 9:00 மணிக்கு முகூர்த்த கால்கோல் விழா மற்றும் முளைப்பாரி இடுதல், கங்கணம் கட்டுதல் நடந்தது.
நேற்று (நவம்., 14ல்) காலை, 4:30 மணிக்கு, இரண்டாம் காலயாக பூஜை, திரவிய ஹோமம், நாடி சந்தானம் ஆகியவை நடந்தது. காலை, 6:00 மணிக்கு, யாத்ராதானம் கடம் புறப்பாடு மற்றும் புதூர் மாரியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.