பதிவு செய்த நாள்
15
நவ
2018
03:11
அந்தியூர்: அந்தியூர் அருகே, வேம்பத்தி பஞ்., பகுதியான, நல்லாமூப்பனூரில், முத்துமினி, முனியப்பன் கோவில் உள்ளது.
இந்தாண்டு கோவில் தேர்த்திருவிழா கடந்த, 31ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான நேற்று, (நவம்., 14ல்)தேர்த்திருவிழா நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் முத்து மினி மற்றும் முனியப்பன் சுவாமியை பல்லக்கு மற்றும் தேரில் சுமந்து ஊர்வலமாக கோவிலில் இருந்து முக்கிய வீதிகளின் வழியே எடுத்துச் சென்று, மீண்டும் கோவிலை சென்றடைந்தனர்.
பின்னர், கோவிலில் பொங்கல் வைத்தல் நடந்தது. அந்தியூர், வேம்பத்தி, வெள்ளாளா பாளையம், பிரம்மதேசம், முனியப்பன்பாளையம், செட்டிகுட்டை, ஓசைபட்டி உட்பட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று 15ல் மஞ்சள் நீராட்டு விழா, 21ல், மறுபூஜை, 28ல், பால் பூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது.