பதிவு செய்த நாள்
15
நவ
2018
03:11
கோவை:பாப்பநாயக்கன்பாளையம் ஸ்ரீநிவாசப்பெருமாள் கோவிலின் நூற்றாண்டையொட்டி, சஹஸ்ர கலசாபிஷேகம்ம் நேற்று (நவம்., 14ல்)நடந்தது.நவ., 12 அன்று, மாலை 4:30 மணிக்கு, திருவாராதனம், யஜமான சங்கல்பம், ஸ்ரீமத் அழகிய சிங்கரின் நியமனத்துடன் மிருத்ஸங்க்ரஹனம், வேத திவ்யபிரபந்த பாராயணம் துவங்கியது. நவ.,13 காலை 7:30க்கு, மஹா கும்பஸ்தானங்கள் நிறுவப்பட்டன. கலசங்கள் ஆவாஹனம் செய்யப்பட்டன.
கும்பங்களில் ஆராதனை செய்து ஹோமங்கள் துவங்கி, பூர்ணாஹுதி சயனாதிவாஸம் நிறைவடைந்தது. நேற்று (நவம்., 14ல்) காலை, 5:30 மணிக்கு விஸ்வரூபமும், திருவாராதனமும் நடைபெற்றன.
வசந்த மண்டபத்தில் பிரதிஷ்டை நடந்தது. உத்ஸவர் எழுந்தருளச்செய்து, ஸஹஸ்ர கலசாபிஷேகம்ம் நடந்தது.மாலை 6:00 மணிக்கு மஹா பூர்ணாஹுதி மற்றும் சாற்றுமறையோடு நிறைவடைந்தது. இன்று 15ல் காலை 8:30 மணிக்கு உற்சவருக்கு
திருமஞ்சனமும், ஹோமமும் நடைபெறும்.