பழநி : பழநி தைப்பூச விழாவை முன்னிட்டு, கோயில் வசூல் நான்கு கோடி ரூபாயை எட்டியது. தைப்பூச விழா 10 நாட்கள் நடந்தன. இந்நாட்களில் கோயில் வசூல் விபரம் (ரூபாய்): பஞ்சாமிர்த விற்பனை- ஒரு கோடி 50 லட்சத்து 81 ஆயிரத்து 575. தரிசன டிக்கெட்- ஒரு கோடி 27 லட்சத்து ஒன்பது ஆயிரத்து 800. தங்க ரத புறப்பாடு காணிக்கை- ஒன்பது லட்சத்து 96 ஆயிரம். ரோப் கார்- 14 லட்சம். வின்ச்- 12 லட்சம்.அபிஷேகம், அர்ச்சனை, தங்கும் விடுதி, முடிக்காணிக்கை உட்பட நான்கு கோடி ரூபாயை எட்டியது என, கோயில் இணை கமிஷனர் பாஸ்கரன் தெரிவித்தார். உண்டியல் எண்ணிக்கை இன்று துவங்கி, மூன்று நாட்கள் நடக்க உள்ளது.