திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே கோவிலூர் முருகன் கோவிலில், பூஜாரிகள் பேரமைப்பு தலைவர் உதயகுமார், ஊர் மக்கள் முன்னிலையில் முருகன்-வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது.
இதையொட்டி ஊர் மக்கள் சீர்வரிசையுடன் கோவிலை வலம் வந்தனர். இருபிரிவுகளாக அமர்ந்து சம்பந்தம் பேசி தாம்பூலத்தட்டு மாற்றினர். மணமக்களாகிய முருகன்-வள்ளி-தெய்வானைக்கு பட்டாடை உடுத்தி அலங்காரம் செய்தனர். யாக வேள்வி முன்னிலையில் திருமாங்கல்யம் சூட்டப்பட்டது. அனைவருக்கும் திருமண விருந்து பரிமாறப்பட்டது.