பதிவு செய்த நாள்
17
நவ
2018
02:11
ஈரோடு: ஈரோடு, பூம்புகார் விற்பனை நிலையத்தில், கார்த்திகை தீபத்திருவிழா, விளக்குகள் கண்காட்சி விற்பனை துவங்கியது. களிமண், பித்தளை, கல், வெள்ளி போன்றவைகளில், சிறிய அகல் விளக்கு, அன்ன விளக்கு, சர விளக்கு என பல்வேறு வகையான விளக்குகள் விற்பனைக்கு உள்ளன. டெரக்கோட்டா வடிவிலான பல வண்ண விளக்குகள், 10 ரூபாய் முதல், ஒரு லட்சம் ரூபாய் வரையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. அனைத்து விளக்குகளுக்கும், 10 சதவீத தள்ளுபடி விற்பனை வழங்கப்படும். வரும், 23 வரை தினமும் விற்பனை நடக்கும் என்று, மேலாளர் சரவணன் தெரிவித்தார்.