பதிவு செய்த நாள்
18
நவ
2018
12:11
சென்னை: கார்த்திகை தீபத் திருவிழாவுக்காக, 2,650 பஸ்களை இயக்க, போக்குவரத்து கழகங்கள் முடிவு செய்துள்ளன. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், 23ம் தேதி, கார்த்திகை மகா தீப திருவிழா நடக்கிறது. இதற்காக, தமிழகம் முழுவதும் இருந்து, பக்தர்கள் செல்கின்றனர். இவர்களின் வசதிக்காக, 21ம் தேதி முதல், சென்னை, திருச்சி, கோவை, கரூர், சேலம், மதுரை, தஞ்சை உள்ளிட்ட மாவட்ட தலைநகரங்களில் இருந்து, திருவண்ணாமலைக்கு, சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் இருந்து, 1,900 பஸ்கள்; பிற போக்குவரத்துக் கழகங்களில் இருந்து, 750 பஸ்கள் என, 2,650 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பஸ்கள், 24ம் தேதி வரை இயக்கப்படும். இதற்காக, 16 இடங்களில், தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.