பதிவு செய்த நாள்
19
நவ
2018
12:11
வேலூர்: இந்தாண்டு, நான்கு லட்சம் கார்த்திகை தீப அகல் விளக்குகள் விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
வேலூர் சூளைமேட்டில், 50க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள், நான்கு தலை முறைகளாக அகல் விளக்கு தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆண்டுதோறும் கார்த்திகை தீபம் அகல் விளக்கு தயாரித்து, பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்புவது வழக்கம்.
இந்தாண்டு, நான்கு லட்சம் அகல் விளக்குகள் தயாரித்து, விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
வேலூர், திருவண்ணமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, மைசூர், அந்தமான் மற்றும் காதி கிராப்ட், பூம்புகார் நிறுவனங்களுக்கு விற்பனைக்கு அனுப்பியுள்ளனர். ஒரு அகல் விளக்கின் விலை,
இரண்டு ரூபாயாகும். கடந்தாண்டு, கையால் அகல் விளக்குகள் தயாரிக்கப்பட்டதால், ஒரு லட்சம் விளக்குகள் மட்டும் தயாரிக்க முடிந்தது. இந்தாண்டு, மகாராஷ்டிராவில் இருந்து வந்துள்ள இயந்திரம் மூலம், விளக்குகள் அதிவேகமாக தயாரிக்கப்படுவதால், நான்கு லட்சம் விளக்குகளை உரிய காலத்தில் தயாரித்து, விற்பனைக்கு அனுப்பியுள்ளோம் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் கூறினர்.